என
ஒன்பதாந்திருவாய்மொழி
-
பா. 1 |
349 |
என்றபடி. 1‘காரணமானபடிதான்
என்?’ என்னில், என் சோதியை - 2பிடாத்தை விழவிட்டுத் தன் வடிவழகைக் காட்டினான்.
‘திருத்திரை எடுத்தாற் கூப்பிடுமாறு போலே கூப்பிட்டேன்; அது கவியாய்த் தலைக்கட்டிற்று.
அன்றிக்கே, 3தன் வடிவழகைக் காட்டியாயிற்றுக் கவிக்கு உள்ளுறை கொடுத்தது,’ என்னுதல்.
‘நீரும் கவி பாடினீராகில் பின்னை இப்படிக் கிடந்து படுகிறது என்?’ என்ன, என் சொல்லி நிற்பனோ
- 4‘நானும் பாதி வழி வந்து அவனாலே அங்கீகரிக்கப்பட்டவனாய் இருக்கிறேனோ? அன்றிக்கே,
பெற்ற பேறுதமான் அளவுபட்டு ஆறி இருக்கிறேனோ?’ என்றது, 5‘ஒரு சாதனத்தைச் செய்தார்க்குப்
பலம் தப்பாமையாலே, நானும் இப்பேற்றுக்குச் சில செய்தேனாய் இது தக்கது என்று இருக்கிறேனோ?
பெற்ற பேறுதான் பொறுக்குமதாய் ஆறி இருக்கிறேனோ? எதனைச் சொல்லித் தரிப்பது?’ என்றபடி.
6‘கிருஷ்ணத்வைபாயநர் என்னும் பெயரையுடைய வியாசரைச் சுவாமியான நாராயணன் என்று
தெரிந்துகொள்; செந்தாமைரக் கண்ணனான அவனைத் தவிர வேறு யார்தான் மஹாபாரதம் செய்தவர் ஆவார்?’
என்றாற்போலே இருக்கிறதாயிற்று.
______________________________________________________________________________
1. ‘காரணமானபடி தான் என்?’
என்னில் என்றது, ‘சொரூபத்தாலேயோ, குணத்தாலேயோ,
விக்கிரஹத்தாலேயோ?’ என்றபடி.
2. ‘வடிவழகைக் காட்டி’ என்று,
காரணமான பிரகாரத்தை அருளிச்செய்கிறார், ‘பிடாத்தை’
என்று தொடங்கி. பிடாத்தை-போர்வையை.
3. கவிக்குக் காரணம்
வடிவழகு,’ என்று மேலே அருளிச்செய்தார். ‘கவிக்கு விஷயமாக’
என்று வேறும் ஒரு கருத்து அருளிச்செய்கிறார்,
‘தன் வடிவழகை’ என்று தொடங்கி.
உள்ளுறை கொடுத்தது-விஷயமாக்கினது.
4. ‘என்சொல்லி நிற்பனோ?’
என்கிறது என்?’ ஆறி இருக்கப்போகாதோ?’ என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார், ‘நானும்’
என்று தொடங்கி.
5. அவற்றை விவரணம் செய்கிறார்,
‘ஒரு சாதனத்தை’ என்று தொடங்கி.
6. ‘என்னால் தன்னை இன்தமிழ்
பாடிய’ என்பதற்குத் திருஷ்டாந்தம் காட்டுகிறார்,
‘கிருஷ்ணத்வைபாயகர்’ என்று தொடங்கி. என்றது,
‘வேதவியாசரைக் கருவியாகக்
கொண்டு மஹாபாரதம் செய்தாற்போலே’ என்றபடி.
‘க்ருஷ்ணத்வைபாயநம்
வ்யாஸம் வித்தி நாராயணம் ப்ரபும்
கோஹ்யந்ய: புண்டரீகாக்ஷாத்
மஹாபாரதக்ருத் பவேத்’
என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா.
3. 4 : 4.
|