1இதற
350 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
1இதற்கு
ஆளவந்தார் அருளிச்செய்யும்படி: ‘சர்வேஸ்வரன் செய்யப் புக்கால் அரியதும் ஒன்று உண்டோ?’
என்றாம். அங்ஙன் அன்றிக்கே, எம்பெருமானார், ‘இவர் தாம் சொன்னாராகிலும் ஒருபடி
போகச் சொல்லித் தலைக்கட்டுவர்: அவனும் தானே சொன்னானாகில் ஒரு குற்றுமும் இல்லாதபடி தலைக்கட்டுவான்:
சிறு குழந்தை எழுத்திடப் புக்கார் தானே ஏதேனும் ஒருபடி இட்டுத் தலைக்கட்டும்; தந்தையாதல் உபாத்யாயனாதல்
இடப்புக்கால்தானே எழுத்தாய் இருக்கும்? அங்ஙன் அன்றிக்கே, இவன் கையைப் பிடித்து இடுவிக்கப்
புக்கவாறே, இவன் ஓரிடத்தே இழுக்க அவன் ஓரிடத்தே இழுக்கக் குதறிக் கொட்டியாய் உருவம் அழிந்து
சிதறிப்போம்; அப்படியே, என்னை உபகரணமாகக் கொண்டு கவி பாடாநிற்கச் செய்தேயும, என்னால்
வரும் குற்றம் தன் பக்கல் தீண்டாதபடி பாடுவித்தான் என்கிறார்’ என்று அருளிச்செய்வர்.
(1)
752
என்சொல்லி நிற்பன்?என்
இன்னுயிர் இன்றுஒன்றாய்
என்சொல்லால்
யான்சொன்ன இன்கவி என்பித்துத்
தன்சொல்லால்
தான்தன்னைக் கீர்த்தித்த மாயன்என்
முன்சொல்
லும்மூவுருவாம் முதல்வனே.
பொ - ரை :
என்னுடைய இனிய உயிரானது இன்று ஒரு பொருளாகும்படி, என் சொல்லால் யான் சொன்ன இனிய கவி என்பதாகப்
பிரசித்தமாக்கித் தன் சொல்லால் தானே தன்னைப் புகழ்ந்து பாடிய ஆச்சரியத்தையுடையவனும்,
எனக்கு முன்னே சொல்லுகின்ற, மும்மூர்த்திகளின் உருவமாய் இருக்கிற முதல்வனுமான எம்பெருமானை எந்தக்
காரணத்தைச் சொல்லித் தரித்திருப்பேன்?
வி-கு :
‘ஒன்றாய் இன் கவி என்பித்துத் தன்னைக் கீர்த்தித்த மாயன், என்முன் சொல்லும் மூவுருமாம் முதல்வனை
என் சொல்லி நிற்பன்?’ என்க. ஒன்றாய்-ஒன்றாகும்படி.
_______________________________________________
1. இதற்கு-இத்திருப்பாசுரத்துக்கு.
ஸ்ரீ ஆளவந்தார் நிர்வாஹத்துக்கு, ‘இன்தமிழ்
பாடிய ஈசன்’ என்றதிலே நோக்கு. ஈசன் - ‘சமர்த்தன்’
என்றபடி.
எம்பெருமானார் நிர்வாஹத்துக்கு ‘என்னால் தன்னை இன்தமிழ் பாடிய
ஈசனை’ என்றதிலே நோக்கு. ஈசன்-குற்றங்கட்கு எல்லாம்
எதிர்த்தட்டானவன். மேலே காட்டிய ‘கிருஷ்ணத்வை
பாயநம்’ என்ற திருஷ்டசாந்தம்,
ஸ்ரீஆளவந்தார் நிர்வாஹத்திற்கு.
|