பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

ஒன்பதாந்திருவாய்மொழி - பா. 2

351

    ஈடு : இரண்டாம் பாட்டு. 1‘தான் தன்னைக் கவி பாடி, நான் பாடினேன் என்று உலகத்தில் பிரசித்தம் ஆக்குவதே! ஒருவனுடையபடி இருந்தபடி என்!’ என்று அவனுடைய ஆச்சரியத்தைக் கண்டு ஆச்சரியப்படுகிறார். ‘அநாதிகாலம் யான் எனது என்னும் செருக்காலே, இல்லாதவனுக்குச் சமமாய்த் தன் பக்கல் முகம் பாராதே போந்த என்னை, நான் ஆபிமுக்கியம் பண்ணும்படி நிர்ஹேதுகமாக அவன் அங்கீகரித்தபடியை அநுசந்தித்தால் எதனைச் சொல்லி நான் தரையில் கால் பாவுவது?’ என்கிறார்.

    2
என் சொல்லி நிற்பன் - 3‘அவன் என்னை அங்கீகரித்த அங்கீகாரம் காரணம் இல்லாதது என்னவோ, காரணத்தோடு கூடியது என்னவோ? 4இத்தலையை ஆராய்ந்து பார்த்த இடத்து ஒரு காரணத்தைக் காண்கின்றிலர்; அத்தலையை அநுசந்தித்துப் பார்த்த இடத்து ஒரு காரணத்தைக் காண்கின்றலர்; 5அநாதிகாலம் கைவிட்டதற்கு ஒரு காரணத்தைக் காண்கின்றிலர்; இன்று

______________________________________________________________________________

1. ‘என் சொல்லால் யான் சொன்ன இன்கவி என்பித்துத் தன் சொல்லால் தான் தன்னைக்
  கீர்த்தித்த மாயன்’ என்பனவற்றைக் கடாட்சித்து அவதாரிகை அருளிச்செய்கிறார். ‘என்
  இன் உயிர் இன்று ஒன்றாய்’ என்றதனைக் கடாட்சித்து வேறும் ஓர் அவதாரிகை
  அருளிச்செய்கிறார், ‘அநாதி காலம்’ என்று தொடங்கி.

2. என் சொல்லி நிற்பன்-‘எந்தக் காரணத்தைச் சொல்லித் தரித்திருப்பேன்?’ என்பது
  பொருள்; ‘ஒரு வழியாலும் தரித்திருப்பதற்குப் பற்றுக்கோடு இல்லை,’ என்பது கருத்து.

3. தமக்குப் பற்றுக்கோடு இல்லாமையைப் பரக்க எடுத்து அருளிச்செய்கிறார், ‘அவன்
  என்னை’ என்றது முதல் ‘ஊற்றங்கோல் காண்கின்றிலர்’ என்றது முடிய.

4. மேல் இரண்டு வாக்கியங்களை விவரணம் செய்கிறார், ‘இத்தலையை’ என்று தொடங்கி.


5. ‘இத்தலையை’ என்று தொடங்கி அருளிச்செய்த வாக்கியங்கள் இரண்டனையும்
  விவரணம் செய்கிறார், ‘அநாதிகாலம்’ என்று தொடங்கி. என்றது, ‘அநாதிகாலம்
  உபேக்ஷித்து உத்கட யாத்ருச்சிகம் அடியான திருப்த விஷயீகாரம்போலே நிர்ஹேதுகம்
  என்னவும் போகாது; இத்தலையில் ஒரு காரணம் காணாமையாலே உபாஸக
  விஷயீகாரம்போலே காரணத்தையுடையது என்னவும் போகாது,’ என்றபடி.
  உத்கடம்-அதிகம். யாத்ருச்சிகம்-எதிர்பாராமல் உண்டாவது.