பத
பத்தாந்திருவாய்மொழி
- ‘இன்பம்’
முன்னுரை
ஈடு :
1சர்வேஸ்வரன் தம்மைக் கொண்டு திருவாய்மொழி பாடுவித்துக்கொண்ட மஹோபகாரத்துக்குப்
பிரதியுபகாரம் தேடிக்காணாமை தருமாறினார், மேல் திருவாய்மொழியிலே; 2இவர்தாம்
தம்முடைய மயக்கத்தாலே பிரதியுபகாரந்தேடித் தடுமாறினார்த்தனை போக்கி இவர்தம்மால் கொடுக்கலாவது
ஒன்றும் இல்லை; அவன் ஒன்று கொண்டு குறைதீரவேண்டும் விருப்பமுடையன் அல்லன்; இவர் தம்முடைய
உபகார ஸ்மிருதி இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமையாலே செய்தது ஒன்றே அன்றோ? 3ஆனாலும்,
ஆறி இருக்கமாட்டாரே! 4இனி, நாமும் அவனுக்கு ஒன்று கொடுத்தோமாய், அவனும் நம்
பக்கல் ஒன்று பெற்றானாகச் செய்யலாவது ஒன்று உண்டு. 5அவன், தனக்கு வகுத்த கைங்கரியத்தைச்
செய்யவே, அதனைத் தனக்குப் பிரதியுபகாரம் செய்ததாக நினைத்திருக்கும் தன்மையனாய் இருந்தான்;
ஆன பின்பு, உம்முடைய சொரூபத்திற்குத் தகுந்ததான ஆத்துமா உள்ள அளவு உளதான அடிமையிலே அதிகரிப்போம்’
என்று பார்த்தார்.
________________________________________________________________
1. மேல் திருவாய்மொழிக்கும்
இத்திருவாய்மொழிக்கும் இயைபு
அருளிச்செய்கிறார்,‘சர்வேஸ்வரன்’ என்று தொடங்கி.
2. ‘ஆயின், வாளா இருக்க ஒண்ணாதோ?’ என்ன, ‘செய்ந்நன்றி அறிதலாலே,
வாளா இருக்கமாட்டாமல் தடுமாறினார்’ என்கிறார்,
‘இவர் தாம்’ என்று
தொடங்கி.
3. ‘இவருடைய ஆகிஞ்சந்யத்தாலும்
அவனுடைய பூர்த்தியாலும் பிரதியுபகாரம்
செய்ய விரகு இல்லையாகில் வாளா இருப்பதற்கு என்?’ என்ன,
‘ஆனாலும்’
என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
4. ‘ஆனால், பிரதியுபகாரம்
செய்யும் விரகு யாது?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘இனி, நாமும்’ என்று தொடங்கி.
5. ‘அவ்விரகாவது
யாது?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘அவன்,
தனக்கு’ என்று தொடங்கி. ‘அவன்’ என்றதனை
தன்மையனாயிருந்தான்’
என்றதனோடு கூட்டுக.
|