பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

1இன

பத்தாந்திருவாய்மொழி - முன்னுரை

383

    1இனித்தான் வேத வாக்கியங்களும் ‘தனது இயல்பான வடிவினை அடைகிறான்’ என்று சொரூபத்தின் அடைதல் அளவும் சொல்லவே, அதற்கு அப்பால் கைங்கரியமானது அவகாத ஸ்வேதம் போலே தன்னடையே வரும் என்று ப்ரஹ்மத்தினை அடைதல் அளவும் சொல்லிவிடும்.

    2
ஆழ்வார்கள் ‘வழுவிலா அடிமை செய்யவேண்டும் நாம்’ என்று அதுதன்னையே சொல்லாநிற்பார்கள்; 3அடைந்தன் பலமான கைங்கரியத்தில் ருசியாலே. 4‘சம்சாரம் தியாஜ்யம்; சர்வேஸ்வரன் உத்தேசியன்’ என்கிற ஞானம் பிறந்து, பகவானை அடைந்தவர்கள், 5‘பகவானை அடைதல் (பிறவிப் பிணிக்கு) மருந்து’ என்று பகவானை அடைதல் அளவிலே நின்றார்கள்; 6அவர்களைக்காட்டிலும்’ மயர்வற மதிநலம் அருளினன்’ என்கிறபடியே, பகவானுடைய திருவருளாலே அடைந்த ஞானத்தையுடையரான இவர்களுக்கு வாசி இதுவாயிற்று.

___________________________________________________________________

1. ‘நன்று; வேதங்களிலே ‘பகவானை அடைதலே புருஷார்த்தம்’ என்னாநிற்க,
  கைங்கரியம் புருஷார்த்தம்’ என்பான் என்?’ என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘இனித்தான்’ என்று தொடங்கி.

        ‘ஸவேந ரூபேண அபிநிஷ்பத்யதே’

என்பது, சுருதி. அவகாத ஸ்வேதம் - நெல் முதலியவற்றைக் குற்றும் போது சரீரத்தில் தோன்றும் வியர்வை.

2. ‘ஆயின், ஆழ்வார்களும், வேதம் போன்று பிரஹ்மத்தினை அடைதல்
  மாத்திரத்தைச் சொல்லிவிட ஒண்ணாதோ?’ என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘ஆழ்வார்கள்’ என்று தொடங்கி. ‘வழுவிலா’ என்பது,
  திருவாய். 3. 3 : 1. அதுதன்னையே - அந்தக்கைங்கரியத்தையே,

3. அப்படிச் சொல்லுகைக்குக் காரணத்தை அருளிச்செய்கிறார், ‘அடைந்ததன்’
  என்று தொடங்கி.

4. ‘நன்று; வேதங்களின் கருத்தை உபப்பிரும்ஹணம் மூலமாக வெளியிட்ட மஹரிஷிகள்
  சொல்லாமைக்குக் காரணம் என்?’ என்ன, ‘சொரூபயாதாத்மிய ஞானம் இல்லாமையாலே’
  என்கிறார், ‘சம்சாரம்’ என்று தொடங்கி.

5. ‘பேஷஜம் பகவத் ப்ராப்தி:’ என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 6. 5 : 59.

6. ‘அவர்களைக்காட்டிலும் இவர்களுக்கு வாசி யாது?’ என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘அவர்களைக்காட்டிலும்’ என்று தொடங்கி. ‘இதுவாயிற்று’ என்றது,
  ‘கைங்கரியத்தில் ருசியுடையராகை ஆயிற்று’ என்றபடி.