பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

1இன

384

திருவாய்மொழி - ஏழாம் பத்து

1இனி, அடிமை செய்யுமிடந்தன்னில் ‘சரீர சம்பந்தம் அற்றுப் பரமபதத்தை அடைந்தால் பின்பு செய்யுகிறோம்’ என்று அவ்வளவும் ஆறியிருக்கும்படியன்றே, செய்ந்நன்றி நினைவு இவரை நலிகிறபடி?

    ஆகையாலே, ‘ஸ்ரீவால்மீகி பகவான் பாடின ஸ்ரீராமாயணம் கேட்கைக்குத் திருவயோத்தியையிலே திருத்தம்பிமாரும் தாமுங்கூடப் பெருமாள் பேரோலக்கம் இருந்தாற்போலே, சர்வேஸ்வரனும் நாம் பாடின திருவாய்மொழி கேட்கைக்காகத் திருவாறன்விளியிலே 2பரியங்க வித்தியையிற்சொல்லுகிறபடியே திருவனந்தாழ்வான் மேே3நாய்ச்சிமாருடனே கூடி நித்திய பரிஜனங்களோடே கூட எழுந்தருளியிருந்தான்’ அங்கே சென்று திருவாய்மொழி கேட்பித்து அடிமை செய்வோம்,’ என்று எண்ணுகிறார். அங்ஙனம் எண்ணுமிடத்திலும், 4சர்வேஸ்வரன் அடையத் தக்கவனானால் அர்ச்சிராதி கதியோடு தேசவிசேடத்தோடு வாசி அற அடையத்தக்கதில் சேர்ந்த தேயாமன்றோ? 5என்றது, ‘முன்பு அடையப்படாதனவாய்ப் பின்பு உபாயத்துக்குப் பலமாய் வருவன யாவை சில? அவையெல்லாம் அடையத்தக்கதில் சேரக் கடவனவாம் அன்றோ?’ என்றபடி.

______________________________________________________________

1. ‘பரமபதத்திலே போனால் அன்றோ அடிமை செய்யலாவது? இங்கே
  செய்யவேண்டும் என்று விரும்புகிறது என்?’ என்ன. அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘இனி, அடிமை’ என்று தொடங்கி.

2. இத்திருவாய்மொழியில் வருகின்ற ‘பாம்பணையப்பன்’ என்பதனைத்
  திருவுள்ளம்பற்றிப் ‘பரியங்க வித்யை’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.
  பரியங்கவித்தியையை ‘அணைவது அரவணை’ என்ற திருப்பாசுர
  வியாக்கினத்திற்காண்க.

3. ‘எழில் மலர் மாதர்’, ‘தேவபிரான்’ என்பனவற்றைத் திருவுள்ளம் பற்றி,
  ‘நாய்ச்சிமாருடனே’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார். அடிமை -
  வாசிகமான அடிமை.

4. ‘ஆனால், அவனை ஒழிய அவன் இருந்த தேசம், தேசத்திற்குப் போகிற
  வழி, எல்லாவற்றையும் எண்ணுகிறது என்?’ என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘சர்வேஸ்வரன்’ என்று தொடங்கி.

5. ‘அது, யாங்ஙனம்?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘என்றது’
  என்று தொடங்கி. ‘பலம்’ என்றது, இடையிலே வரும் பலத்தை.