பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

அப

பத்தாந்திருவாய்மொழி - முன்னுரை

385

    அப்படியே, ‘திருவாறன்விளையிலே எழுந்தருளியிருக்கிற சர்வேஸ்வரன் திருவடியிலே போய் அடிமை செய்யக் கடவோம். அதுதானும் வேண்டா; அந்தத் தேசத்தை அடைதல்தானே அமையும். அதுதானும் வேண்டா; 1இங்கே, இருந்தே அங்கு ஏறப்போவதாக எண்ணுகிற அவ்வெண்ணந்தானே அமையும். 2இனி, நாம் அத்தேசம் அடையத் தக்கது என்று புத்தி பண்ணிப் போருவதைப் போன்று, அவனும் நாம் இருந்த தேசத்தைக் குறித்து வரக்கடவன்: அவ்வளவிலும் நாம் அவனைத் தொடர்ந்து சென்று விட்டு நாம் அத்தேசத்திலே போய்ப் புகக்கடவோம்; அத்தேசமே நமக்கு அடையத் தகுந்தது; 3அங்கே போய்ப் புகவே, நம்முடைய கைங்கரிய விரோதிகள் அனைத்தும் கழியும். இனி, 4நான் வேறு ஒன்றிலே இச்சை பண்ணினாலும், என் நெஞ்சமானது அத்தேசத்துக்கு ஒழிய ஒரு தேசத்துக்கு ஆளாக மாட்டாது; 5‘என்னுடைய மனமானது வேறு ஒன்றிலும் செல்லுவது இல்லை’ என்கிறபடியே.’ 6ஆக, திருவாறன்விளையிலே புக்கு அடிமை செய்யக்கூடிய படிகளை எண்ணி இனியர் ஆகிறார்.

    7
ஸ்ரீ ராமாயணத்தைக்காட்டிலும் இதற்கு வாசி, பாடினாரே கேட்பிக்கையும், பாட்டுண்டாரே கேட்கையுமாயிற்று.

_______________________________________________________________

1. ‘ஈங்கு நினைக்கப் பெற’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி, ‘இங்கே இருந்தே’
  என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.

2. ‘ஆடு பறவைமிசைக் கண்டு கைதொழுது அன்றி’ என்றதனைத் திருவுள்ளம்
  பற்றி, ‘இனி, நாம்’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.

3. ‘ஒன்றி வலம் செய்ய ஒன்றுமோ தீவினை?’ என்றதனைத் திருவுள்ளம்
  பற்றி, ‘அங்கே போய்ப் புகவே’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.

4. ‘கூடுங்கொல் என் சிந்தனை?’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி, ‘நான்
  வேறு ஒன்றிலே’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.

5. இதற்குத் திருஷ்டாந்தம் காட்டுகிறார், ‘என்னுடைய’ என்று தொடங்கி.

        ‘பாவோ நாந்யத்ர கச்சதி’

என்பது, ஸ்ரீராமா. உத்தர. 40 : 15.  இச்சுலோகத்தை முன்னே காண்க.

6. மேலே கூறியவற்றை எல்லாம் சேர்த்து முடிக்கிறார், ‘ஆக’ என்று
  தொடங்கி.

7. இதனால், ஸ்ரீராமாயணத்திற்கும் இதற்கும் உள்ள வேறுபாட்டினைக்
  காட்டுகிறார், ‘ஸ்ரீராமாயணத்தை’ என்று தொடங்கி.