1
386 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
1‘சீதையின்
மஹத்தான சரிதம்’ என்னாநிற்கச்செய்தே, கவி பாட்டுண்டவளை ஒழியத் தானே அன்றோ கேட்டது?
பாடினான் ஸ்ரீவால்மீகி பகவான்; கேட்பித்தாரும் குசலவர்கள் அல்லரோ?
762
இன்பம் பயக்க
எழில்மலர் மாதருந்
தானும்இவ்
வேழுலகை
இன்பம் பயக்க
இனிதுடன் வீற்றிருந்து
ஆள்கின்ற
எங்கள்பிரான்
அன்புற் றமர்ந்துறை
கின்ற அணிபொழில்
சூழ்திரு
வாறன்விளை
அன்புற் றமர்ந்து
வலஞ்செய்து கைதொழும்
நாள்களு
மாகுங்கொலோ?
பொ - ரை :
அழகிய தாமரைப்பூவில் வீற்றிருக்கின்ற பெரிய பிராட்டியாரும் தானும் இன்பம் பிறக்கும்படியாக
இனிதாக ஒரு சேர எழுந்தருளியிருந்து. இந்த ஏழ் உலகங்களை இன்பம் பிறக்கும்படியாக ஆள்கின்ற எங்கள்
பிரானானவர் அன்போடு மனம் பொருந்தி எழுந்தருளியிருக்கின்ற அழகிய சோலைகள் சூழ்ந்த திருவாறன்விளை
என்னும் திவ்விய தேசத்தை அன்போடு மனம் பொருந்தி வலம் செய்து கை தொழுகின்ற நாள்களும் உண்டாகுங்
கொல்?
வி-கு :
‘எழில் மலர் மாதரும் தானும் இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து இவ்வேழ் உலகை இன்பம் பயக்க
ஆள்கின்ற எங்கள் பிரான் உறைகின்ற திருவாறன் விளையை வலஞ்செய்து கைதொழும் நாள்களும்
ஆகுங்கொல்?’ என்க, பிரான் - உபகாரகன்.
ஈடு :
முதற்பாட்டு. 2‘திருவாறன்விளையிலே புக்கு உவகையினராய்க் கொண்டு அடிமை செய்யுங்காலமாகவற்றே?’
என்று எண்ணுகிறார்.
இன்பம் பயக்க -
3எப்பொழுதும் துக்கத்தையே அடைந்து கொண்டிருக்கிற சம்சாரி சேதனனுக்குத் தன்னுடைய
சேர்த்தியாலே.
_______________________________________________________________
1. ‘அங்கு இவ்விரண்டும்
இல்லையோ?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘சீதையின்’ என்று தொடங்கி.
2. பின் இரண்டு அடிகளைக்
கடாட்சித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.
3. ‘எழில் மலர் மாதரும் தானும் இன்பம் பயக்க’ என்று கூட்டி, ‘எழில் மலர்
மாதர்’ என்று விசேடிக்கையாலே,
‘ஈஸ்வரனுடைய ஆனந்தத்துக்குக்
காரணம் இவள் சேர்த்தி’ என்கிறார், ‘எப்பொழுதும்’ என்று தொடங்கி.
|