பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

ஆனந

பத்தாந்திருவாய்மொழி - பா. 1

387

ஆனந்தம் உண்டாமாறு போலே ஆயிற்று பிராட்டியுடைய சேர்த்தியாலே 1‘ஆநந்தமய:’ என்கிற வஸ்துவான அவன் தனக்கும் ஆனந்தம் உண்டாம்படியும்; 2‘அல்லி மலர்மகள் போக மயக்குகளாகியும் நிற்கும் அம்மான்’ என்று பிராட்டியுடைய சேர்த்தியாலே பிச்சு ஏறி இருக்குமாயிற்று. 3‘ராம: - ஸ்ரீபரசுராமாழ்வானைச் செருக்கு வாட்டிப் படை வீட்டிலே வந்து புகுந்து சக்கரவர்த்தியையும் மஹரிஷிகளையும் பின் பற்றித் தர்மத்தையே மிகுதியாக நடத்திப் போந்தவர். து - தமப்பனுக்குச் செய்ய வேண்டிய குற்றவேல் முதலியவைகளைச் செய்து பின்பு பிராட்டியுடைய ரசதாரையிலே இழிந்த பின்பு, ‘இதற்கு முன்பெல்லாம் 4வாத்ஸ்யாயநம் கற்றுக் காம தந்திரமே நடத்திப் போந்தாரித்தானையோ!’ என்னும்படி வேறுபட்டார். என்றது, ‘முன்பு போருகிற நாளில் ‘இவர் இதற்கு முன்பு காம ரசம் புதியது உண்டு அறியாரோ?’ என்னும்படி போந்த இவர், இப்போது ‘இதற்கு முன்பு தருமத்தின் உண்மையைப் புதியது உண்டு அறியாரோ?’ என்னும்படி வேறுபட்டார்,’ என்றபடி.

    ஸீதயா ஸார்த்தம் - 5அயோநிஜையாய்ப் பரமபதத்தில் தானும் அவனுமாய் இருந்து கலந்த போதைச் செவ்வியில் ஒன்றும் குறையாமல் இருந்தவள் அன்றோ பிராட்டி? இப்படி இருக்கச் செய்தேயும், தம்மை அழிய மாறி மற்றைச் சாதியினரோடு ஒத்தவராக அவதரித்தாரேயாகிலும், போகத்தில் வந்தால் அவளுங்

_______________________________________________________________

1. ‘ஆநந்தமய:’ என்பது, சுருதி.

2. பிராட்டியுடைய சேர்த்தியாலே ஆனந்தம் உண்டாவதற்குப் பிரமாணம்
  காட்டுகிறார், ‘அல்லி மலர் மகள்’ என்று தொடங்கி. இது, திருவாய்.
  3. 10 : 8.

3. இருவருமான சேர்த்தியிலே ஆனந்தம் உண்டாம் என்னுமதற்குப்
  பிரமாணமும் பிரமாணத்திற்குப் பொருளும் அருளிச்செய்கிறார், ‘ராம:’
  என்று தொடங்கி.

    ‘ராமஸ்து ஸீதயா ஸார்த்தம் விஜஹார பஹூந் ருதூந்
    மநஸ்வீ தத்கத: தஸ்யாநித்யம் ஹ்ருதி ஸமர்ப்பித:’

என்பது, ஸ்ரீராமா. பால. 77 : 25.

4. வாத்ஸ்யாயநம் - காமசாஸ்திரம்.

5. ‘ஸீதயா’ என்றதிலுள்ள மூன்றாம் வேற்றுமையை அப்பிரதானமாகக்
  கொண்டு பொருள் அருளிச்செய்கிறார், ‘அயோநிஜையாய்’ என்று
  தொடங்கி. ‘அயோநிஜை’ என்றது, ‘ஸிதா’ என்ற சொல்லைத் திருவுள்ளம்
  பற்றி. அயோநிஜை - கருவிலே தங்கிப் பிறவாதவள்.