கூடப
388 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
கூடப் பிரதானம் அற்றவளாம்படி
அதில் தலைநின்றார். 1‘அதற்கு அடி என்?’ என்னில், இராசபுத்திரரான ரசிகத் தன்மையால்
வந்த ஏற்றத்தாலே. விஜஹார - 2பாரிப்பே ஒழியப் போகத்தில் இழியப் பெற்றிலர்;
தொடக்கத்துக்கே பணி போந்ததித்தனை. என்றது, ‘உபோத்காதத்துக்கே காலம் போந்ததித்தனை’
என்றபடி. பஹூந்ருதூந் - 3‘ஸமாத்வாதஸ தத்ராஹம’ என்கிறபடியே. பன்னிரண்டு ஆண்டு
ஒரு படிப்பட அனுபவிக்கச்செய்தேயும், ‘ருது’ சப்தத்தாலே சொல்லுகிறான் ஆயிற்று, அவ்வவ காலங்களுக்கு
அடைத்த மலர் முதலான உபகரணங்களைக்கொண்டு கால அவயவங்கள் தோறும் அனுபவித்துப் போந்தமை தோற்ற.
என்றது, ‘குளிர் காலத்துக்கு அடைத்தவைகொண்டு பரிமாறியும் வெயில் காலத்துக்கு அடைத்தவைகொண்டு
பரிமாறியும் அனுபவித்தமை தோற்றச் சொல்லுகிறான்’ என்றபடி. மநஸ்வீ - 4பிரணயதாரையில்
வந்தால், அவள் பாரித்த பாரிப்புக்கு எல்லாம் யானைக்குக் குதிரை வைக்கைக்கு ஈடான நெஞ்சில்
அகலமுடையவராயிற்று.
தத்கத: - திரவியம்
திரவியத்தோடு சேர்ந்தாற்போல அன்றிக்கே, சாதி குணங்கள் திரவியத்தோடு சேர்ந்தாற்போலே
சேர்ந்தார்; 5‘நான் பெருமாளோடே கூடியே இருப்பவள்’ என்றும், 6‘சீதை
என்னோடு கூடியே உள்ளவளன்றோ?’ என்றுமன்றோ இருவர்
______________________________________________________________
1. அதற்கு அடி - தலை நிற்கைக்குக்
காரணம்.
2. ‘அநு பபூவ’ என்னாமல்,
‘விஜஹார’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார்,
‘பாரிப்பே’ என்று தொடங்கி.
3. ‘வத்ஸரான்’ என்னாமல்
‘ருதூந்’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார்,
‘ஸமாத்வாதஸ’ என்று தொடங்கி.
‘ஸமாத்வாதஸ தத்ராஹம்’
என்பது, ஸ்ரீராமா. சுந். 33 :
17. ‘நான் அங்குப் பன்னிரண்டு வருடங்கள்
முடிய’ என்பது இதற்குப் பொருள். இது, பிராட்டியின்
வார்த்தை.
‘சொல்லுகிறான்’ என்றது, ஸ்ரீவால்மீகி பகவானை.
4. மிகுதிப் பொருளிலே இனி
பிரத்தியயமாக்கிப் பொருள் அருளிச்செய்கிறார்,
‘பிரணயதாரையில்’ என்று தொடங்கி. யானைக்குக்
குதிரை வைக்கையாவது,
பிடி கொடுக்குமாறு போலே இருந்து பிடி கொடாது ஒழிகை. பிரத்தியயம் -
இடைச்சொல்.
5. அப்படிச் சேர்ந்தே
இருப்பவர்கள் என்பதற்குப் பிரமாணங்கள்
காட்டுகிறார், ‘நான்’ என்று தொடங்கியும், ‘சீதை’
என்று தொடங்கியும்.
‘அநந்யா ராகவேணாஹம்
பாஸ்கரேண ப்ரபா யதா’
என்பது, ஸ்ரீராமா. சுந். 21 :
16. இராவணனைப் பார்த்துப் பிராட்டி கூறியது.
6.
‘அநந்யா ஹி மயா ஸீதா பாஸ்கரேண ப்ரபா யதா’ ஸ்ரீராமா. யுத். 122 : 19.
இது, இராவணவதத்தின்
பின் வந்து கூடிய பிரமன் முதலிய தேவர்களைப்
பார்த்து ஸ்ரீராமபிரான் கூறியது.
|