பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

பத்தாந்திருவாய்மொழி - பா. 1

389

வார்த்தைகளும்? தஸ்யாநித்யம் ஹ்ருதி ஸமர்ப்பித: - இதில் இழிவதற்கு முன்பு இவரை அறிந்திருக்குமவளாகையாலே, ‘அப்படிப் பெரியவர் இப்போது என் பக்கலிலே தாழிநிற்பதே இப்படி இது ஒரு நீர்மையே!’ என்று எப்போதும் இந்த நினைவே செல்லுகை ஆகையாலே, வேறு ஒன்றும் நெஞ்சிற்படாதே அவள். தன்னைத் தம் பக்கலிலே போகடும்படி ஆனார். தத்கத - என்கையாலே, இவர் தம்மை அவள் பக்கலிலே 1ஓக்கினபடி சொல்லிற்று, ‘நித்யம் ஹ்ருதி ஸமர்ப்பித:’  என்கையாலே. அவள், தன்னை இவர் பக்கலிலே ஓக்கினபடி சொல்லுகிறது. 3இப்படி இருவருமான சேர்த்தியிலே, இதற்கு முன்பு ஆனந்தம் புதியது உண்டு அறியாதான் ஒருவனுக்கு ஆனந்தம் உண்டாமாறுபோலே ஆயிற்று, கணந்தோறும் உண்டாம்படி.’

    எழில் மலர் மாதரும் - 3‘ராகவன் வைதேவியை ஒக்கின்றான்’ என்னுமாறு போலே ஆயிற்று இத்தலை. தானும் - ‘எவனுக்குச் சீதை மனைவியாக ஆவாளோ’ என்றும் ‘ஜனகனுடைந பெண்ணாகிய சீதை எவனுடைய மனைவியோ’ என்றும் சொல்லலாம்படி ஆயிற்று.

______________________________________________________________

1. ஓக்கினபடி-ஆக்கினபடி; பரதந்திரர் ஆக்கினபடி.

2. இந்தப் பிரமாணங்களை எடுத்ததற்குப் பிரயோஜனத்தை
  அருளிச்செய்கிறார், ‘இப்படி’ என்று தொடங்கி.

3. ‘ராகவோர்ஹதி வைதே ஹீம்’

என்பது, ஸ்ரீராமா. சுந். 16 : 5. 

      ‘யஸ்ய ஸீதா பவேத் பார்யா’

என்பது, ஸ்ரீராமா. ஆரண்ய. 34 : 18.

      ‘யஸ்ய ஸா ஜநகாத்மஜா’

என்பது, ஸ்ரீராமா. ஆரண்ய. 37 : 18.

      ஆக, ‘ராகவோர்ஹதி’ என்கையாலே, ‘எழில் மலர் மாதர்’ என்று
  பிராட்டி வைலக்ஷண்யமும், ‘யஸ்ய ஸீதா பவேத் பார்யா’ என்று ‘பார்யா’
  என்கையாலும், ‘யஸ்ய ஸா ஜநகாத்மஜா’ என்பதில் ‘யஸ்ய’ என்பது,
  அடிமைப்பொருளில் ஆறாம் வேற்றுமையாகையாலும், ‘தானும்’ என்று
  பெருமாள் வைலக்ஷண்யமும் சொல்லுகிறது என்றபடி. ‘இத்தலை’ என்றது,
  பிராட்டியை. ‘அத்தலை’ என்றது, பெருமாளை.

    ‘நம்பியைக் காண நங்கைக்கு ஆயிரம் நயனம் வேண்டும்;

    கொம்பினைக் காணுந் தோறும் குரிசிற்கும் அன்ன தேயாம்’

என்ற செய்யுளை இங்கு நினைவு கூர்க. கம்பரா.