அத
390 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
அத்தலை. இவ்வேழ் உலகை
இன்பம் பயக்க - 1‘இராமர் சீதையைப் பெற்றுப் பின்னர் இராச்சியத்தை அடைந்தார்;
உலகம் மிக்க உவகையை அடைந்தது’ என்கிறபடியே, தந்தை தாயார் இருவரும் சேர இருந்து பரியப்
புக்கால் குழந்தைகளுக்கு ஒரு குறையும் பிறாவாதே அன்றோ? 2ஆக, இருவருமான சேர்த்தியாலே
தங்களுக்கு ஆனந்தம் உண்டாக, அச்சேர்த்தியைக் காண்கையாலே உலகத்துக்கு ஆனந்தம் உண்டாக,
அதனைக் கண்டு குழந்தை பால் குடிக்கக் கண்டு உகக்கும் தாயைப்போலே இவர்களுக்கு உண்டான பிரீதியைக்
கண்டு அதனாலே தாங்ஙள் இனியராய் இருப்பர்களாயிற்று. இனிது உடன் வீற்றிருந்து ஆள்கின்ற - தன்
சந்நிதியாலே உலகம் அடையத் தளிரும் முறியுமாம்படி இருக்கிறவன், தான் பெறாப்பேறு பெற்றாற்போலே,
‘திருவாய்மொழி கேட்கைக்குத் தகுதியாக இருப்பது ஒரு தேசம் பெற்றோம்’ என்று விரும்பி வசிக்கிற
தேசமாயிற்று. எங்கள் பிரான் - 3‘கேசவன்தமர்’ என்ற திருவாய்மொழிக்குப்
பின்பு இவர்தாம் தனியார் அல்லர் அன்றோ? என்னை இடுவித்துத் திருவாய்மொழி பாடுவித்துக்கொண்ட
உபகாரகன்.
அன்புற்று -
‘திருவாய்மொழி கேட்கலாய் இருப்பது ஒரு தேசம் பெறுவோமே!’ என்று அங்கே அன்பினை வைத்து. அமர்ந்து
- அந்தத் தேச வாசத்துக்கு மேற்பட ஒரு பிரயோஜனத்தைக் கணிசியாதே விரும்பி. உறைகின்ற -
அவதாரங்கள் போலே தீர்த்தம் பிரசாதியாதே, நித்தியவாசம் செய்கிற. அணிபொழில் சூழ்
________________________________________________________________
1. பெருமாள் பிராட்டி என்னும்
இருவருடைய ஆனந்தத்தைச் சொன்ன
பின்னர், உலகத்தாருடைய ஆனந்தத்தைச் சொல்லுவதற்கு பாவம்
அருளிச்செய்கிறார், ‘இராமன்’ என்று தொடங்கி.
‘ராம: ஸீதாம் அநுப்ராய
ராஜ்யம் புந: அவாப்தவாந்
ப்ரஹ்ருஷ்டமுதிதோ
லோக: துஷ்ட: புஷ்ட: ஸூதார்மிக:’
என்பது, சந்க்ஷேப ராமா. 1. :
89.
2. கூறப்பட்ட மூவருடைய ஆனந்தத்தையும்
முடித்துக்கொண்டு ‘இனிதுடன்
வீற்றிருந்த’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘ஆக’ என்று தொடங்கி.
3.
‘எங்கள்’ என்ற பன்மைக்குக் கருத்து அருளிச்செய்கிறார், ‘கேசவன்தமர்’
என்று தொடங்கி.
‘பிரான்’ என்றதற்குப் பொருள், ‘என்னை’ என்று
தொடங்கும் வாக்கியம்.
|