பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

கடல

வியாக்கியானத்தில் வந்துள்ள உவமைகள்

429

    கடல் எல்லாப்பொருள்களையும் தன்னுள்ளே அடக்கி, ஒன்றை ஒன்று நலியாதபடி நோக்குமாறு போலே. பக். 72.

    பிரஹ்மத்திகளைச் செய்து பூணூலே வெளுக்க விட்டுக் கையிலே பவித்திரத்தையும் இட்டு ஒத்துச் சொல்லித் திரிவாரைப் போலே. பக். 74.

    தண்ணீர்ப் பந்தலிலே கொலைஞர் தங்கினதைப் போன்றது. பக். 74.

    புழுகூற்றிச் சட்டம் போகடுவாரைப் போலே. பக். 73.

    திவ்விய ஆயுதங்கள் பகைவரை அழிப்பதற்கு உடலாக இருக்குமாறு போலே. பக். 80.

    தசை முறுகினால் வைத்தியர்கள் முகம் பாராதவாறு போலே. பக். 86.

    சமந்தகமணி கைப்பட்ட பின்பு அக்குரூரன் அடுத்து அடுத்து அஸ்வமேதம் செய்தாற்போலே. பக். 112.

    சம்சாரிகள் ஐம்புல இன்பங்களினின்றும் மீளமாட்டாதவாறு போலே. பக். 119.

    கிண்ணகத்தில் ஒரு சுழியிலே அகப்படுவாரைப் போலே. பக். 121.

    திருப்பாற்கடல் கடைகிற காலத்தில் தான் எட்டு வடிவு கொண்டாற்போலே. பக். 123.

    வினைத்தலையிலே படை அறுக்குமாறு போலே. பக். 127.

    முத்தர் சாமகானம் பண்ணி அப்பிரீதிக்குப் போக்கு விடுமாறு போலே.
பக். 131.

    செந்நெலுக்குத் தண்ணீர் தாரகமாய் இருக்குமாறு போலே. பக். 139.

    மலைகளின் சிகரங்களைக் கொடுவந்து வைத்தாற்போலே. பக். 150.

    மலரும் போது எங்கும் ஒக்கப் பிறக்கும் மலர்ச்சி போலே. பக். 157.

   
பரிகரம் நிற்க மஹாராஜர் இராவணன் மேல் பாய்ந்தாற்போலே. பக். 161.