வத
44 |
திருவாய்மொழி - ஏழாம்
பத்து |
வத்திலே திருக்கண் வளர்ந்தருளினபடியைச்
சொல்லுகிறது. 1உலகம் தோன்றுவதற்குக் காரணாமாயிருத்தலின், பிரசித்தமான திருநாபிக்
கமலத்தையுடையனாய்க்கொண்டு, படைத்தலின் நோக்குள்ளவனாய் ஏகார்ணவத்திலே திருக்கண்வளர்ந்தருளின
உபகாரகனானவனுக்கே. 2‘அப்புண்டரிகக் கொப்பூழ்’ என்கையாலே, பிரமன் சிவன்
முதலாயினோர் காரியம் என்னுமிடமும், அவன் காரணன் என்னமிடமும் சொல்லிற்று. 3ஒருவனுடைய
பிறப்பை அன்றோ சொல்ல வேண்டவது? ‘பிரமனுடைய ஜ்யேஷ்ட புத்திரனுக்கு, சிறந்தவனுக்கு’ என்கிறபடியே,
மற்றையோனான சிவனுடைய பிறப்பு, தன்னடையே வரும் அன்றோ? ‘நான்முகனை நாராயணன் படைத்தான்’
என்றால், மற்றையவன் பிறப்பும் உடனே சொல்லப்படும் அன்றோ? இப்படி வேத வைதிகங்கள்
சொல்லாநின்றான அன்றோ?
____________________________________________________________________
1. ‘பெரியவனை மாயவனைப்
பேருலக மெல்லாம்
விரிகமல வுந்தியுடை விண்ணவனை’
என்பது, சிலப்பதிகாரம், ஆய்ச்சியர்
குரவை.
‘இருபது மந்தரத் தோளும்
இலங்கைக் கிறைவனசென்னி
ஒருபது மந்தரத் தேஅறுத் தோன்அப்பன்
உந்திமுன்னான்
தருபது மம்தர வந்தன நான்முகன்
தான்முதலா
வருபது மம்தரம் ஒத்தபல்
சீவனும் வையமுமே.’
என்பது திருவேங்கடத்தந்தாதி.
‘ஒருநாலு முகத்தவனோடு
உலகீன்றாய் என்பாஅதுன்
திருநாபி மலர்ந்ததல்லால்
திருவுளத்தில் உணராயால்.’
என்பது, திருவரங்கக் கலம்பகம்.
2. ‘நீனிற வுருவின் நெடியோன்
கொப்பூழ்
நான்முக ஒருவன் பயந்த
பல்லிதழ்த்
தாமரைப் பொகுட்டின்’
என்பது, பெரும்பாணாற்றுப்படை, அடி
402-404.
3. ‘‘அப்புண்டரிகக்
கொப்பூழ்’ என்ற இதனால், பிரமனுடைய பிறப்பினைச் சொன்னால்,
சிவனுடைய பிறப்பினையும்
சொல்ல வேண்டாவோ?’ என்ன, ‘ஒருவனுடைய’
என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘ப்ரஹ்மண: புத்ராய
ஜயேஷ்டாய ஸ்ரேஷ்டாய’ என்பது சுருதி.
‘’நான்முகனை நாரா யணன்படைத்தான்
நான்முகனும்
தான்முகமாய்ச் சங்கரனைத்
தான்படைத்தான்’
என்பது நான்முகன் திருவந்தாதி.
|