New Page 1
முதல் திருவாய்மொழி - பா.
11 |
45 |
தொண்டர் தொண்டர் தொண்டர்
தொண்டன் சடகோபன் - 1விஷயங்களையும் இந்திரியங்களையும் நினைத்த நெஞ்சாரல்
தீர, சேஷத்துவத்தினுடைய எல்லை நிலத்திலே போய் நிற்கிறார்; 2தாபத்தாலே
வருந்தினவன் மடுவிலே தாழ இழியுமாறு போலே. கண்டு பாட வல்லார் - 3இவருடைய நிலையை
நினைத்தால் பாடப் போகாதே அன்றோ? கண்டு - நமக்குத் தஞ்சம் என்று நினைத்து. வினை போம்
கங்குலுப் பகலே - இரவு பகலில் வினை போம். 4‘இராப்பகல் மோதுவித்திட்டு’ என்ற
துயரம் போம்.
(11)
திருவாய்மொழி
நூற்றாந்தாதி
உண்ணிலா ஐவ
ருடன்இருத்தி் இவ்வுலகில்
எண்ணிலா மாயன்
எனைநலிய-எண்ணுகின்றான்’
என்றுநினைந் தோலமிட்ட
இன்புகழ்சேர் மாறனெனக்
குன்றிவிடு மேபவக்கங்
குல்.
(61)
ஆழ்வார் எம்பெருமானார்
சீயர் திருவடிகளே அரண்.
__________________________________________________________________
1. ‘‘தொண்டர் தொண்டர்
தொண்டர் தொண்டன் சடகோபன்’ என்று சேக்ஷத்துவத்தின்
எல்லையைச் சொல்லுவான் என்?’ என்ன,
‘விஷயங்களையும்’ என்று தொடங்கி
அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
2. இதற்குத் திருஷ்டாந்தம்
காட்டுகிறார், ‘தாபத்தாலே’ என்று தொடங்கி.
3. ‘வல்லார்’ என்றதற்கு
பாவம் அருளிச்செய்கிறார், ‘இவருடைய’ என்று தொடங்கி.
4. ‘இரவு பகலில் வினையாவது
யாது?’ என்ன, ‘இராப்பகல்’ என்று தொடங்கி அதற்கு
விடை அருளிச்செய்கிறார்.
|