பக்கம் எண் :

10

     பெருமையைக் கூறுவர். இறைவன், விஷ்ணு பண்புகளோடு கூடியவன்
என்பது வைணவ அடிப்படைக் கொள்கை மேன்மையும், நீர்மையும்,
வடிவழகும் கூடிய பசுங்கூட்டமாயிற்று பரத்துவம் என்பது வ்யாக்யானம்.

     மேன்மைக்குத் துணையானவை, உலகத் தோற்றத்திற்கு உதவுபவை,
அடியாரை உய்விக்க அமைந்தவை என இறைவனுக்குரிய பண்புகளை
மூவகையாகக் கூறுவர்.

     மேன்மைக்குத் துணையானவை

     எம்பெருமானைச் சேரவேண்டுமென்று முக்தி ஒன்றையே குறிக்கோளாக்
கொண்ட பக்தன் அடையக்கூடிய “பரத்வ” நிலையான அமர்ந்த திருக்கோலம்.

     உலகத்தோற்றத்திற்கு உதவுபவை

     தன்னை வியூகப்படுத்தி திருப்பாற்கடலில் எழுந்தருளி அபயக் குரல்
கேட்கும் போதெல்லாம் ஆதரவளிக்கும் சயன திருக்கோலம். (பிரம்மனும்
உலகைப் படைக்கும் முன் சயன திருக்கோலத்திய பெருமானைத் தரிசித்த
பின்பே உலகு படைக்கலுற்றான் என்பர்)

     அடியாரை உய்விக்க அமைந்தவை

     இதுவே விபவ அவதாரமாகவும், அர்ச்சாவதாரமாகவும்,
அந்தர்யாமியாகவும் இருந்து உலகு நடைபெற பக்தர்கட்கு அருளும் நின்ற
திருக்கோலம்.

     இந்த மூன்று குணங்கள் வைணவத்தில் எம்பெருமானின் கல்யாண
குணங்களாச் சித்தரிக்கப்படுகின்றன. இந்த மூன்று குணங்களின்
பண்புகளைத்தான்

     சௌல்ப்யம் - எளிமை
     சௌசீல்யம் - நீர்மை
     ஆர்ஜவம் - செம்மை
     வாத்ஸல்யம் - பரிவு
     சுவாமித்வம் - தலைமை என்றனர்.

     யசோதையின் கயிற்றுக்கு கட்டுண்டு நின்ற காட்சியை எளிமைக்கும்
 

மூவுலகும் இருள்தீர நடந்தமையை நீர்மைக்கும்
இலங்கையை கட்டழித்த நீர்மையை செம்மைக்கும்
பாண்டவர்கட்காக தூது நடந்து சென்றதை பரிவுக்கும்
அமரர்கள் தொழுதேத்த நிற்கும் தன்மையை தலைமைக்கும்