| அந்த பரந்தாமனின் பத்னி) ஜீவாத்மாக்கள் இந்த லட்சுமியின் மனோபாவத்தை அடையும்போது அந்தப் பரமாத்மாவாகிற எம்பெருமான் தானே இரட்சிக்கத் தொடங்குகிறான். இது அவன் கடமையுமாகிறது. அதுவே ஜீவாத்மாக்களின் முக்திக்கு வழிகாட்டியாகிவிடுகிறது. இப்படிப்பட்ட மனநிலையைத்தான் எல்லா ஆழ்வார்களும் அடைந்து விஷ்ணுவிடம் தங்கள் பக்தியினையும் காதலையும் வளர்த்துக் கொண்டார்கள். இந்தப் பக்தி பெருங்காதலில் ஆழ்ந்தமையால், ஆழ்வார்கள் ஆனார்கள். அதனால்தான் இறைவனை “கண்ணுக்கு இனியன்” என்று பாடினார்கள். “மனத்துக்கு இனியன்” என்று ஆண்டாள் பாமாலை சூட்டினாள். இதனால் தான் நாவலந்தீவில் வாழும் நங்கை மீர்காள் என்று எல்லா ஜீவாத்மாக்களையும் பெண்தன்மையேறிட்டவர்களாய் பெரியாழ்வார் விளக்கினார். “நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பா” என்று பட்டத்தரசியாகிற லட்சுமிக்கும் நமக்கும் உள்ள சம்பந்தத்தை பெரியாழ்வார் தெளிவுபடுத்துகிறார். இராமன் கானகம் கிளம்பும்போது இலட்சுமணன் இராமனிடம், நானும் சீதையும் உம்மை விட்டு என்றும் பிரியோம் என்று உரிமையோடு பேசுகிற நிலையும் இந்த ஜீவாத்மா தத்துவத்தை உணர்த்துவதுதான். பெரியாழ்வாரும், “பெருப் பெருத்த கண்ணாலங்கள் செய்து பேணி நம்மில்லத் துள்ளே இருத்துவா னெண்ணி நாமிருக்க இவளா மொன் றென்னு கின்றாள் மருத்துவப் பதம் நீங்கினா ளென்னும் வார்த்தை படுவதன் முன் ஒருப் படுத்திடு மின் இவளை உலகளந் தானி டைக்கே” | மருத்துவன் வந்து பார்த்து நான் பக்குவம் செய்யும் கால எல்லையைத் தாண்டிவிட்டது என்று கூறுவதற்கு முன் இவளின் கருத்தையறிந்து செயல்பட வேண்டும். (இவள் உன் மகள்) கண்ணனிடம் பேரன்பு கொண்டவள். ஆகவே இப்போதே இவளைக் கொண்டுபோய் கண்ணன் பால் சேர்த்துவிடுங்கள். இப்பேர்ப்பட்ட மனநிலையை அடைந்தவனே வைஷ்ணவன். இவ்விதம் மாறாக் காதல் கொண்டு மயங்கி நிற்கவைக்கும் அந்த மாயவன் நற்குணங்களின் உறைவிடம். நற்குணக்கடல், குணங்களால் உயர்ந்த வள்ளல் என்றெல்லாம் கம்பர், திருமாலின் |