| முயல்வது போல் காட்சி கொடுத்தாராம். இன்றும் இதுபோல் சாய்ந்தவாறே எழுந்திருக்க முயலும் திருக்கோலத்தில்தான் காட்சி தருகிறார். இந்த நிலைக்குத் தான் உத்தனன் சாயி (சாய்ந்து எழமுயலும் திருக்கோலம்) என்று திருப்பெயர். “நடந்த கால்கள் நொந்ததோ நடுங்கு ஞால மேனமாய கிடந்த மெய் குலுங்கவோ விலங்கு மால் வரைச்சுரம் கடந்த கால் பரப்பிக் காவிரிக் கரைக் குடந்தையுள் கிடந்த வாறெ யெழுந் திருந்து பேசு வாழி கேசவனே” | பெருமாள் எழ ஆரம்பித்ததும், ஐயோ வீணாக நாம் சிரமப் படுத்திவிட்டோமே என நினைத்த ஆழ்வார், எழுந்திருக்க முயன்ற எம்பெருமானை நோக்கி வாழி கேசவனே என்றார். அப்படியே எழ முயன்ற சாய்ந்த திருக்கோலத்திலேயே இருந்துவிட்டார். 8. 150 அடி உயரமுள்ள ராஜகோபுரம் இப்பெருமான் மீது பக்திகொண்ட லட்சுமி நரசிம்ம சுவாமி என்ற பக்தர் ஒருவரால் கட்டப்பட்டதாகும். 9. இங்குள்ள சிங்கச் சின்னம் பொறித்த மண்டபம் பல்லவ மன்னன் மகேந்திர வர்மனால் கட்டப்பட்டதாகும் (7ம் நூற்றாண்டு) 10. தாயார் கோமளவல்லி ஒரு போதும் வெளியில் உலாவராது இறைவன் திருப்பணியிலேயே இடையறாது ஈடுபட்டிருப்பதால் படிதாண்டாப் பத்தினி என்ற பெயரும் தாயாருக்குண்டு. 11. இங்குள்ள உற்சவமூர்த்தி சார்ங்கம் என்னும் வில்லை எப்போதும் கையில் வைத்திருப்பதால் சாரங்கபாணி என்ற திருநாமம் உண்டாயிற்று. சார்ங்கமென்னும் வில்லாண்டான் தன்னை என்பது பெரியாழ்வாரின் மங்களாசாசனம். 12. வைணவ மத வளர்ச்சிக்கு ஒரு பெரிய மலைபோன்று விளங்கிய கிருஷ்ணதேவராயரால் இத்தலம் புதுப்பிக்கப்பட்டது. 13. முகலாயர்கள் படையெடுப்பின்போது இக்கோவிலை கொள்ளையிட்டு அழித்துவிட எத்தனித்துவிடுங்கால் நெய்வாசல் உடையார் என்னும் பக்தர் தமது பக்தி |