பாடல்களைக் கொண்ட இத்திருவெழு கூற்றிருக்கை ரதபந்தம் என்ற பெயரில் அழைக்கப் படுகிறது. 6. நாலாயிர திவ்ய பிரபந்தத்தைத் தொகுப்பதற்கு இப்பெருமானே காரணமாக இருந்ததாகக் கூறுவர். நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தை தொகுத்த நாதமுனிகள் இப்பெருமானை தரிசிக்க வந்தபோது இவரைப்போலவே எம்பெருமானை தரிசிக்க வந்த சில பக்தர்கள் “குழலின் மலியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும் மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே” என்ற பாசுரத்தை இசைத்துக் கொண்டு வந்ததைக் கேட்ட நாத முனிகள், ஆயிரம் பாக்களுண்டோ என்று ஆச்சரியப்பட்டு அவைகளை ஒன்றுவிடாமல் சொல்லுமாறு கேட்டார். அதற்கவர்கள் இந்த பத்துப் பாசுரங்கள் தவிர வேறு எந்தப் பாசுரமும் தமக்குத் தெரியா தென்றும். இவைகள் ஆயிரம் பாக்கள் மட்டுமன்று மொத்தம் நாலாயிரம் ஆகுமென்று எடுத்துரைக்க, இதைக்கேட்ட நாத முனிகள் மிகவும் ஆச்சரியத்துடன் இந்த நாலாயிரத்தையும் தொகுப்ப தெங்ஙனம் என்ற சிந்தனையில் அங்கேயே துயின்றுவிட அவரது கனவில் வந்த எம்பெருமான் நாலாயிரத்தை தொகுக்கும் பொருட்டு நாதமுனிகளை ஆழ்வார் திருநகரிக்கே போகுமாறு பணித்ததாகவும், அவ்வாறே குருகூர் வந்தடைந்த நாத முனிகள், நம்மாழ்வாரைக் குறித்துத் தவமிருந்து இறுதியில் நம்மாழ்வாரின் தரிசனத்துடன் நாலாயிரத்தையும் தொகுத்து நற்றமிழ் உலகுக்கு தெய்வீகப் புகழ் சேர்த்துவிட்டார். ஆராவமுதன் என்று பெயர் கொண்ட இப்பெருமான் ஆழ்வார்களின் பாக்களைத் தொகுப்பதற்கு காரணமாக இருந்தமையால் ஆராவமுதாழ்வாரென்ற பெயரையே இப்பெருமானுக்குச் சூட்டலாயினர். இக்கதை குருபரம்பரையில் காட்டுமன்னார்குடியில் என்று காணப்படினும் ஆராவமுதாழ்வான் என்ற திருநாமம் இங்கு உள்ள பெருமாளை ஊர்ஜிதப்படுத்தும். 7. திருமழிசையாழ்வார் இப்பெருமாளை நோக்கி இலங்கைக்கு நடந்த வருத்தத்தால் கால்கள் நொந்து களைத்துப்போய் படுத்துள்ளீரோ, வராஹரூபியாய் உலகைத் தாங்கிய களைப்போ, என்று கேட்டுகிடந்தவாறே எழுந்திருந்து பேசு கேசவனே என்று பாடியதும், சற்றே எழுகின்ற திருக்கோலத்தில் புஜத்தைச் சாய்த்து எழுந்திருக்க |