மேலீட்டால் வைக்கோற்போரால் இப்பெருமானின் இருப்பிடத்தை மூடி மாடுகட்டும் இடம் என்று சொல்லி அவர்களை மருளச் செய்து திருப்பியனுப்பினார். நெய்வாசல் உடையார் வம்சத்தாருக்கு ஸாசனமும், மரியாதைகளும் இங்கு தொன்றுதொட்டு இருந்து வந்தது. 14. பாபங்களைப் போக்குவதில் வடநாட்டில் உள்ள காசிக்கு ஈடானது இத்தலம் என்று வடமொழி நூல்கள் பரக்கப் பேசுகின்றன. 15. முன்னொரு யுகத்தின் முடிவு நெருங்கும் வேளையில் பிரளயம் வரப்போவதை உணர்ந்த பிரம்மன் சிருஷ்டிக்கு காரணமான விதையையும், வேதங்களையும் அமுதத்தையும் இட்டு நிரப்பி வைத்த ஒரு குடத்தை இமயத்தின் சிகரத்தில் வைக்க பிரளயத்தின் போது ஏற்பட்ட பெருவெள்ளத்தில் அக்குடம் மிதந்து வந்து சோழநாட்டை அடைய அப்போது தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, பரமசிவன் வேடன் உருக்கொண்டு ஒரு அம்பால் குடத்தின் மூக்கை உடைக்க அக்குட மூக்கின் வழியாக உள்ளிருந்த அமுத வெள்ளம் கீழே பரவி மீண்டும் சிருஷ்டிக்கு வழி வகுத்ததென்றும், அது இரு பிரிவுகளாகப் பிரிந்து ஒன்று மகாமகக் குளத்தையும், மற்றொன்று பொற்றாமரைக் குளத்தையும் சார்ந்ததென்று ஸ்தல புராணம் விளக்குகிறது. அவ்விதம் குட மூக்கின் வழியாக அமுதம் வெளிவந்த இடமாகையால் இவ்வூருக்கு குடமூக்கு (திருக்குடந்தை) அல்லது கும்பகோணம் என்றும் பெயர் வந்ததாகக் கூறுவர். 16. இச்சேத்திரத்தில் இவ்வெம்பெருமான் தவிர ஸ்ரீசக்ரபாணி, ஸ்ரீராமர், ஸ்ரீவராஹர், ஸ்ரீகோபாலன், ஸ்ரீவேத நாராயணன், ஸ்ரீவரதராஜன் போன்ற எம்பெருமான்களும் எழுந்தருளியுள்ளனர் இதில் ஸ்ரீராமர் பட்டாபிஷேகத்தின் திருக்கோலத்தில் உள்ள சந்நிதி பார்ப்பதற்கு பேரழகு பொருந்தியதாகும். 17. இவ்வூரில் வாழ்ந்த லெட்சுமி நாராயணசுவாமி என்னும் பக்தர் இப்பெருமானின் கைங்கர்யத்தில் பெரிதும் ஈடுபட்டு, தகப்பன், தன் மகளுக்கு ஆற்றும் கடமைகள் போல் வாழ்நாளெல்லாம் இப்பெருமானுக்குப் பணிவிடை செய்வதிலேயே காலங் கழித்தார். உறவினர் ஒருவரும் இல்லாத அவர் பரமபதம் அடைந்ததும் அவருக்குச் செய்ய |