பக்கம் எண் :

103

13. திருவிண்ணகர் என்னும் ஒப்பிலயப்பன் கோவில்

     பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்
          கொண்டாங் குறைவார்க்கு கோயில் போல்
     வண்டு வளங்கிளரு நீள் சோலை வண்பூங்கடிகை
          இளங்குமரன் தன் விண்ணகர்.
                      (2342) மூன்றாந் திருவந்தாதி - 61

     முன்பு வைகுண்டத்திலிருந்த திருமால், அடியார்கட்கு அருள்புரியும்
பொருட்டு திருவேங்கடம் திருப்பாற்கடல், அழகிய புஷ்பங்களில் வண்டுகள்
கிளரக்கூடிய திருக்கடிகை, திருவிண்ணகர் ஆகிய திவ்ய தேசங்களில் இளமை
குன்றாது திகழ்கின்றான் என்று பேயாழ்வாரால் திருவாய் மலர்ந்தருளப்பட்ட
இந்த திருவிண்ணகர் கும்பகோணத்திலிருந்து சுமார் 3 1/21/2 மைல்
தொலைவில் உள்ளது. பேருந்து வசதிகள் ஏராளம்.

வரலாறு

     பிரம்மாண்ட புராணத்தில் தன் தந்தையாகிய பிரம்மனிடம் நாரதர்
இத்தலத்து மேன்மையை வினவ, நாரதனுக்குச் சொல்வது போல் இத்தல
வரலாறு பேசப்படுகிறது.

     ஒரு சமயம் திருத்துழாய்த் தேவி, திருமாலிடம் இலக்குமி பிராட்டியை
மட்டும் மார்பில் தாங்கியுள்ளீர்கள், எனக்கும் அதுபோன்ற சிறப்பு
வேண்டுமெனக் கேட்க, கடுந்தவம் புரிந்து என் மார்பில் இடம் பெற்ற
இலக்குமி மீண்டும் பூவுலகு சென்று பூமிதேவி என்ற பெயருடன்
காவிரிக்கரையில் தோன்ற விருக்கிறாள். அவளுக்கு முன்பாகவே நீ சென்று
துளசிச் செடியாக அங்கே தோன்றவும், உன் மடியில் (நிழலில்) இலக்குமி
அவதரிப்பாள். பின்னொரு நாள் நான் இலக்குமி தேவியை ஏற்றுக்
கொள்வேன். இலக்குமி அவதரிப்பதற்கு நீ ஆதாரமாக இருந்தபடியால்
இலக்குமியை விட சிறந்த பேற்றினை பெறுவாய். இலக்குமி தேவியின்
அருளைக் கூட கடுந்தவத்திற்குப் பின்பே ஒருவன் அடைய முடியும். ஆனால்
உன் இதழ்களால் (துளசியால்) என்னை பூசிப்பவர்கள் அசுவமேத
யாகத்திற்குண்டான பலனைப் பெறுவார்கள். உன் வனத்தை
உறைவிடமாகக் கொண்டு உறைபவர்கள் வைகுண்டம் பெறுவார்கள்.
எப்போதும் நீ என் நெஞ்சை அலங்கரிக்கும் மாலையாவாய். துளசி
மாலையை ஏற்றுக்கொண்ட பின்புதான் நான் இலக்குமி தேவியை மணம்