பக்கம் எண் :

117

ரென்றாலும் “மடலூர்ந்தது திருநறையூருக்காகவே” என்று பெரியோர்கள்
தலைக்கட்டுவர். இதற்குச் சான்றாக,

     அ) “ஊரா தொழியேன் உலகறிய ஒன்னுதலீர்
          சீரார் முலைத்தடங்களை சேரளவும் - பாரெல்லாம்
     அன்று ஓங்கி நின்று அளந்தான் நின்ற திருநறையூர்
          மன்னோங்க ஊர்வன் மடல்”

     என்று கம்பர் குறிப்பதிலிருந்து உணரலாம்.

     ஆ) திருமங்கையாழ்வார் திருவரங்கத்திற்கு மதில் கட்டினார். இதனால்
இவர்மேல்உகந்த அரங்கன் ஆழ்வாருக்குத் தீர்த்தம், திருமாலை, பரிவட்டம்,
சடகோபம் போன்றவற்றை அளித்து, “ஆழ்வீர் திருமடல் பிரபந்தங்களை
நமக்கு அருளிச் செய்யல் ஆகாதோ” என்றார்.

     அதற்கு திருமங்கை எம்பெருமான் முன் பணிந்து வாய் புதைத்து நின்று
நம்பிக்குத் திருமடலும், தேவரீருக்கு திருமதிலும் அமைந்தது. மதில் இங்கே
மடல் அங்கே என்று மாற்றஞ் சொன்னாராம்.

     இச்சான்றுகளன்றியும் பிள்ளத் திருநறையூர் அரையர் என்பார் அருளிச்
செய்த பெரிய திருமடலுக்கான தனியனில் (தனிப்பாடலில்)

     “பொன்னுலகில் வானவரும் பூமகளும் போற்றிச் செய்யும்
          நன்னுதலீர் நம்பி நறையூரர் - மண்ணுலகில்
     என்னிலமை கண்டும் இரங்காரே யாமாகில்
          மன்னு மடலூர்வன் வந்து”

     என்றுரைத்த சான்றுகளாலும் இம்மடல் நறையூர் நம்பிக்கே மொழிந்த
ஒன்றாகக் கொள்வது மட்டுமன்றி அவனுக்கே உரித்தானது என்றும்
உரைக்கலாம்.

     இங்கே ஒரு சிறிய இலக்கிய சர்ச்சை.

     மடலூர்தல் என்பது ஆடவருக்குத்தானே ஒழிய பெண்டிர்க்குஇல்லை
என்பது இலக்கணம்.

     கடலன்ன காமம் உழன்றும் மடலேறாப்
          பெண்ணிற் பெருந்தக்க தில்.     
                                   என்பார் வள்ளுவர்.

     எத்தனை மருங்கினும் மகடுஉ மடன்மேற்
         பொற்புடை நெறியின்மை யான

     என்று மடற்மேற் செல்லும் நெறி மகளிருக்கு இல்லையென அகத்தினை
இயல் இலக்கணங் காட்டுகிறது.