பக்கம் எண் :

120

     படைத் தானுல குண்டவன்
     எந்தையெம்மான் ......................... 1378

     என்று இவ்வரங்கத்து எம்பெருமானையே பரமபத நாதனாக் கண்டு
அவனது வ்யூகத்தை வர்ணிக்கிறார். எனவே இவர் திருமங்கைக்கு
பரக்ருதியானார்.

     திருநறையூரானே திருமங்கைக்கு குமுத வல்லியாரைக் காட்டிக்
கொடுத்தமையாலும், அவரது திருமேனியில் பஞ்ச ஸமஸ்காரம் செய்வித்து,
திருமந்திரம் உரைத்து உடல் விளக்கம் செய்தமையால் இவர் உடலாகிறார்.

     16. சடகோபன் (நம்மாழ்வார்) நாயிகா பாவத்தை அடைந்து
ஸ்ரீதொலைவில்லி மங்கலத்தெம்பெருமானை நாயகனாக அனுபவித்தார்.

     ஸ்ரீபரகாலன் (திருமங்கையாழ்வார்) நாயிகா பாவத்துடன்
திருவாலியெம்பெருமானை அனுபவித்தார்.

     ஸ்ரீமத் இராமானுஜர் திருநாராயணபுரத்து எம்பெருமானை என்
செல்லப்பிள்ளையே என்று அனுபவித்தார்.

     பெரியாழ்வார் தன்னைத் தாயாகவும், கண்ணனைக் குழந்தையாகவும்
கொண்டு தாய்ப்பாவம் காட்டினார்.

     ஆனால் இவர்களையெல்லாம் விஞ்சி இப்பெருமான் மீது மோகம்
கொண்டு மடல் விடுத்தார் திருமங்கை.

     17. திருநறையூர் எம்பெருமானின் பேரழகில் திருமங்கையாழ்வார்
மையல் கொண்டது எண்ணியெண்ணி வியக்கத்தக்கதாகும். நறையூர்
எம்பெருமானை இப்படி வர்ணிக்கிறார்.
 

     மன்னு மறையோர் திருநறையூர் மாமலை போல்
          பொன்னியலும் மாடக் கலாடம் கடந்து புக்கு
     என்னுடைய கண்களிப்ப நோக்கினேன் - நோக்குதலும்
          மன்னன் திருமார்பும் வாயும் - அடியினையும்
     பன்னு கரதலமும் கண்களும் - பங்கயத்தின்
          பொன்னியல் காடோர் மணிவரைமேல் பூத்ததுபோல்
     மின்னி ஒளி படைப்ப வீழ்நாணும் தோள் வளையும்
          மண்ணிய குண்டலமும் ஆரமும் நீண்முடியும்
     துன்னு வெயில் விரித்த சூளா மணியிமைப்ப