பக்கம் எண் :

121

     மன்னு மரகதக் குன்றின் மருங்கே
                       (பெரிய திருமடல் 73-77)

     என்று மின்னும் மரகதக் குன்று என பெருமானை வர்ணித்துக்கொண்டே
வரும்போது அவனருகே பிராட்டி நிற்பதையும் கவனித்துவிட்டார்.

     உடனே ....................... ஓர்

     இன்னிள வஞ்சிக் கொடியொன்று நின்றதுதான்
          அன்னமாய் மானாய் அணிமயிலாய் ஆங்கிடையே
     மின்னாய் இளவேய் இரண்டாய் இணைச் செப்பாய்
          முன்னாய தொண்டையாய் கெண்டைக் குலமிரண்டாய்
                                - பெரிய திருமடல் (77-80)

     என்று மருங்கே நின்ற பிராட்டியையும் வர்ணித்தார். இவ்வளவு
பேரழகாய்ப் பிராட்டி நிற்பதையும் அறியாது என் மனமானது அவன் பக்கம்
சென்றே மையல் கொண்டு நிற்கிறதே என்பதை,

     அன்ன திருவுருவம் நின்றதறியாதே
          என்னுடைய நெஞ்சும் அறிவும் இனவளையும்
     பொன்னியலும் மேகலையும் ஆங்கொழியப் போந்தேற்கு
          மன்னும் மறிகடலும் ஆர்க்கும் - மதியுகுத்த
     இன்னிலாவின் கதிரும் என்றனக்கே வெய்தாகும்
               - பெரிய திருமடல்ஃ (81 - 85)

     என்று அவனை விட்டு நீங்காத உணர்வு கொண்டு நிலவொளி கூட
வேகிறதே என்கிறார். என்னே காதல் மயக்கம்

     18. சிவபிரானுக்கு 70 திருக்கோயில்களை எழுப்பிய கோச்செங்கண்
என்னும் சோழ மன்னன் வைணவத்தில் ஈடுபட்டு இப்பெருமானிடம் பேரன்பு
பூண்டதை,

முருக்கிலங்கு கனித்துவர் வாய்ப்பின்னை கேள்வன்
     மன்னனெல்லாம் முன்னவியச் சென்று, வென்றிச்
செருக்களத்து திறலழியச் செற்ற வேந்தன்
     சிரந் துணித்தான் திருவடி நும் சென்னி வைப்பீர்
இருக்கிலங்கு திருமொழிவா யெண்டோளீசற்கு
     எழில் மாட மெழுபதும் செய் துலக மாண்ட
திருக்குலத்து வளச்சோழன் சேர்ந்த கோயில்
     திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே

                என்கிறார் திருமங்கையாழ்வார் -1505