பக்கம் எண் :

130

     6. திருமங்கையாழ்வாரால் மட்டும் 14 பாக்களால் மங்களாசாசனம்
செய்யப்பட்ட ஸ்தலம்.

     7. நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தைத் தொகுத்த நாத முனிகளுக்கு
திருக்கண்ண மங்கையாண்டான் என்று ஒரு சீடர் இருந்தார் அவர் இவ்வூரில்
பிறந்தவர். அவர் இப்பெருமானிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டு இக்கோவிலின்
உட்புறத்தே புல்லினைச் செதுக்கிச் சுத்தப்படுத்தி இப்பெருமானே
அடைக்கலம் என்று இருந்தார். ஒரு நாள் அவர் நித்யாநுஸந்தான
கோஷ்டியுடன் வேத பாராயணஞ் செய்து கொண்டு இக்கோவிலுக்குள்
நுழையும் பொழுது திடீரென நாய் வடிவங்கொண்டு மூலஸ்தானத்திற்குள் ஓடி
ஜோதியாகி இறைவனுடன் கலந்தார். இன்றும் ஆனி மாதம் திருவோண
நட்சத்திரம் இவரின் மகா நட்சத்திரமாகக் கொண்டாடப்படுகிறது.

     8. சிவபெருமான் நான்கு உருவமெடுத்து இத்தலத்தின் 4 திக்குகளையும்
காவல் காத்து வருகிறார் என்பது ஐதீகம்.

     9. இங்குள்ள அருமையான சிற்பங்களில் வைகுண்ட நாதன் சிலையும்,
கருடன் மேல் எழுந்தருளியுள்ள மகா விஷ்ணு சிலையும், மிக்க எழில்
கொண்டு காண்போரை காந்தம் போல் கவரும் தன்மை கொண்டவை.

     10. மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்த போது வானத்தை அளந்த
பாதத்தை பிரம்மன் தனது கமண்டல நீரால் அபிஷேகம் செய்ய அதிலிருந்து
தெறித்துவிழுந்த ஒரு துளி இவ்விடத்தில் விழுந்து அதுவே தர்சன புஷ்கரிணி
யாயிற்றென்று புராணங் கூறும்.

     நவகிரகங்களில் ஒருவனான சந்திரன் தனது குருவின் பத்னியான
தாரையுடன் காமத் தொடர்பு கொண்டு புதனைப் பெற்றெடுத்தான். இதனால்
தேவர்கள் அனைவரும் சந்திரனைச் சபித்தனர்.

     இதனால் சந்திரனின் கலைகள் குறைந்து ஒளியிழந்து தினமும்
தேயலானான். தனது நிலை கண்டு மிகவும் வருந்திய சந்திரன் பிரம்மனிடம்
வேண்ட, பிரம்மன் கண்ணமங்கையில் வீற்றிருக்கும் பக்த வத்சலனைச்
சேவித்து அங்குள்ள தர்சன புஷ்கரிணியில் நீராடினால் இச்சாபம் தீரும்
என்று சொல்ல சந்திரன் இங்குவந்து தர்சன புஷ்கரிணியைக் கண்ட
மாத்திரத்தில் இவனது சாபந் தீர்ந்தது. எனவே இந்த புஷ்கரிணிக்கு தர்சன