| புஷ்கரிணி (தரிசித்த மாத்திரத்தில் பயன்தர வல்லது) எனப்பெயர். 11. இந்த தர்சன புஷ்கரிணியின் நீரினை எடுத்து பிராட்டிக்கு பட்ட மகிஷியாக பகவானால் அபிஷேகம் செய்யப்பட்டதால் இந்தப் பிராட்டிக்கு அபிஷேகவல்லி எனப்பெயர். 12. இங்குள்ள பெருமாள் சன்னதியில் வெளிப்புறச் சுவரில் அஞ்சலி ஹஸ்தராகப் புத்தர் பிரான் சிலை உள்ளது. 13. திருமங்கையாழ்வார் தமது திருமொழியிலும், திருவரங்கத்தமுதனார் இராமானுஜ நூற்றந்தாதியிலும், பிள்ளைப் பெருமாள் ஐயங்காரும் இத்தலத்தைத் தமது பாக்களில் குறிப்பிடுகின்றனர். 14. அந்தகக்கவி வீரராகவ முதலியார் இந்த தாயார் மேல் 100 பாக்கள் கொண்ட “கண்ணமங்க மாலை” பாடியுள்ளார். 15. இப்பெருமாளைப் பற்றிக் காளமேகப்புலவர் “நீல நெடுங்கடலோ நீலமணிக் குன்றமோ” கோலம் சுமந்தெழுந்த கொண்டலோ - நீல நிறக் காயா மலரோ களங்கனியோ கணமங்கை மாயா உனது வடிவு என்று பாடியுள்ளார். | 16. வடலூர் இராமலிங்க அடிகளார் இந்த தாயாரின் மீது உலகம் புரக்கும் பெருமான்றன் உளத்தும் புயத்தும் அமர்ந்தருளி உவகையளிக்கும் பேரின்ப உருவே எல்லாம் உடையாளே திலகஞ் செறி வாணுதற் கரும்பே தேனே, கனிந்த செழுங்கனியே தெவிட்டா தன்பர் உள்ளத்துள்ளே தித்தித்தெழுமோர் தெள்ளமுதே மலகஞ் சகத்தேர் கருளளித்த வாழ்வே யென் கண்மணியே யென் | |