பக்கம் எண் :

132

     வருத்தந் தவிர்க்க வரும் குருவாம்
          வடிவே ஞான மணிவிளக்கே
     சலகந்தரம் போல் கருணை பொழி
          தடங்கண் திருவே கண்ணமங்கை
     தாயே சரணஞ் சரணமிது தருணங்
          கருணை தருவாயே”
                           என்று பாடிப்பரவுகிறார்.

     17. திருவரங்கத்தைப் போன்றே இத்தலத்திற்கு தெற்கே ஒரு மைல்
தொலைவில் “ஓடம் போக்கி நதியும், வடக்கே ஒரு கல் தொலைவில் விருத்த
காவேரி” என்னும் வெட்டாறும் ஓடி இருநதியிடைப்பட்ட ஸ்தலம் போல்
ஆக்குகின்றது.

     18. எங்கும் 4 கரங்களுடன் விளங்கும் விஸ்வக் சேனர் இங்கு இரண்டு
கரங்களுடன் தோன்றுகிறார்.

     19. கி.பி. 1608இல் அச்சுத விஜயரகுநாத நாயக்கர் என்பவரால் (திருமலை
நாயக்கரின் பரம்பரையைச் சேர்ந்தவர்) இத்தலத்திற்கு மராமத்து செய்யப்பட்டு
சீர்திருத்தம் நடைபெற்றது. ஏராளமான நிலதானமும் செய்யப்பட்டது.

     20. இத்தலத்தின் “ஸ்தல வ்ருட்சம்” மகிழமரம் ஆகும்

     21. திருக்கண்ணமங்கைக்கு திருமங்கையாழ்வார் அருளிய பதிகத்தின்
கடைசிப் பாவினில் இத்தலத்திற்கு, தான் உரைத்த பத்துப் பாக்களைக்
கற்றவர்கள் விண்ணவராகி மகிழ்வெய்துவர் என்று கூறுகிறார். அம் மட்டோடு
நில்லாமல் சங்கேந்திய கண்ணபிரானே உண்மையிலேயே நீகூட இப்பாக்களைக்
கற்க நினைக்கின் கற்கலாம். என்கிறார் இதோ அப்பாடலைப் பாருங்கள்.
 

     “கண்ண மங்கையுள் கண்டுகொண்டேன்” என்று
          காதலால் கலிகன்றியுரை செய்த
     வண்ண வொண்டமி ழொன்பதோ டொன்றிவை
          வல்ல ராயுரைப்பர், மதியம் தவழ்
     விண்ணில் விண்ணவராய் மகிழ்வெய்துவர்
          மெய்மை சொல்லில் வெண் சங்க மொன்றேந்திய
     கண்ண, நின்தனக்கும் குறிப்பாகில்
          கற்கலாம் கவியின் பொருள்தானே” 1647