பக்கம் எண் :

14

     11) பிள்ளைப் பெருமாளையங்காரின் அஷ்ட பிரபந்தம்.

     12) அருளாளப் பெருமாளின் ஞான சாரம், பிரமேய சாரம், சப்த காதை,
மாறனகப் பொருள், திருப்பதிக் கோவை.

     13) நாலாயிரத்திவ்ய பிரபந்தம்.

     14) துளசி ராமாயணம், கம்பராமாயணம், வில்லி பாரதம்.

     15) பாரத வெண்பா எனப்படும் சங்ககாலத்து நூலான
பெருந்தேவனாரின் பாரதம்.

     16) ஆழ்வார்களின் பாசுரங்கட்கு அருளப்பட்ட வியாக்யானங்கள்.

     17) முமூச்சப்படி, தத்வத்ரயம், ஸ்ரீவசனபூஷணம், ஆச்சார்ய ஹ்ருதயம்
என்னும் நூல்கள்.

     18) ஆங்காங்கே கிடைக்கும் ஸ்தல புராணங்கள்.

     இப்பேர்ப்பட்ட நூல்களால் அறியப்படும் வைணவம்தான் ஆத்மாவிற்கு
மோட்சத்தை அடைய பாதைகாட்டும் வழிகாட்டிகளாகும்.

     தொன்மை இந்தியாவில் மட்டுமல்ல இன்றைய இந்தியாவிலும்,
இடையிடையே புகுந்த எண்ணற்ற மதங்களும் அவ்வப்போது உருவாகி மிளிர
முடியாமல் போயிற்று. வைணவம் மட்டும் சூர்யன் போல் பிரகாசிக்கிறது.
அமுதனாரின் பாடலொன்று...
 

(பொற்சைவ வைணவமும்) புத்தர்பிரான் பொன்னுரையும்
நற்சமணக் கிறித்தவமும் நபிகள் பிரான் நல்லுரையும்
     பற்பலவாய் இருந்திடினும் பைந்தமிழின் பண்பேற்று
கற்போரைப் பிடித்திழுத்துக் கனிதமிழின் சுவையூட்டி
     (நாயன்மார் நாவமுதும்) நல்லாழ்வார் பாசுரமும்
காவியமாய் இந்நாட்டில் கதிர்வீசக் காண்கிறோம்.

     என்பதும், மிகச் சிறந்த ஞானத்தை (முக்தியடையும் வழியை)
இந்தியாவே உலகிற்கு அளிக்கும் என்பதை,

     எல்லா உயிர்களிலும் நானே யிருக்கிறேன்
          என்றுரைத்தான் கண்ண பெருமான்
     எல்லோரும் அமரநிலை எய்தும் நன்முறையை
          இந்தியா உலகிற்களிக்கும் - ஆம்