பக்கம் எண் :

149

     காவிரியின் தென்கரை தொடங்கி திருமறைக்காடு வரை தென்வடல்
கீழ்மேலாக பரந்துபட்ட காட்டின் 50 யோஜனை அளவுக்கு கிருஷ்ணாரண்யம்
(கிருஷ்ணனின் காடு) என்று பெயர். இதன் கீழ்த்திசையில் 5 மைல்
தொலைவுக்கு உள்ள பகுதியே சௌந்தர்ய ஆர்ணயம். மிகப்பழஞ்சுவடிகள்
சுந்தராரண்யம், என்றே இப்பகுதியைப் பற்றிப் பேசுகின்றது.

     இத்தலம் நான்கு யுகங்களில் பெருமை பெற்றுத் திகழ்ந்தது.
கிரேதாயுகத்தில் இங்குள்ள ஸார புஷ்கரணி அருகாமையில் நாகங்களுக்குத்
தலைவன் ஆதிசேடன் எம்பெருமானைக் குறித்து தவமிருந்து எம்பெருமான்
காட்சி கொடுத்து, ஆதிசேடனை எப்போதும் தான் சயனமாக ஏற்றுக்
கொள்வதாக அருளிய ஸ்தலம்.

     ஆதிசேடன் ஆகம விதிப்படி அஷ்டாங்க விதான முறையில்
பெருமாளை ஆராதித்ததால் அவன் பெயராலேயே நாகன்பட்டினமாகி
நாகப்பட்டினமாயிற்று.

     திரேதாயுகத்தில் பூமாதேவியும், துவாபரயுகத்தில் மார்க் கண்டேயனும்
பகவானைக் குறித்து தவமிருந்த ஸ்தலம்.

     இந்தச் சௌந்த்ரா ரண்யத்தைப் பற்றியும் (ஸாரம் என்றால் பாம்பு,
பாம்பாகிய நாகராஜனால் உண்டாக்கப்பட்ட) ஸார புஷ்கரிணி பற்றியும்,
 

     “யப்பிரயஸ்தி கிருஷ்ணாதி சௌந்தர் ஆரண்ய
          பூதலே தரவு பௌ புண்ய கர்மாணௌ
     பேத்தா ரென்ன சூர்யமண்டலம்” என்றும்
          “சாரபுஷ்கரிணி தீரமத்ஸே சுந்தர்கான(க)ம்
     ஆவிர்ப்ப பூவ, பகவான் லட்சுமி ஷீர சாகராத்”

     அதாவது இப்பெருமானை மனசுத்தியோடு வழிபட்டு இங்குள்ள ஸார
புஷ்கரணியில் தீர்த்தமாடினால் அவர்கள் சூர்யமண்டலத்தை அடைவார்கள்
என்று இந்த ஸ்தலத்தின் மகிமையை எல்லாம் நாரதர் மூலம் கேட்ட துருவன்
என்னும் சிறுவன் (உத்தானபாத மகாராஜனின் குமாரன் இவன்) இந்த உலகு
முழுவதும் தனக்கே அடிமையாக வேண்டுமென்று திருமாலைக் குறித்து
இவ்விடத்தே கடுந்தவம் செய்து, தவத்தில் உண்டான எண்ணற்ற
இடையூறுகளை எல்லாம் கடந்து நிற்க, இறுதியில் எம்பெருமான் கருடாழ்வார்
மீது பேரழகு பொருந்தியவராகக் காட்சி கொடுக்க, அப்பேரழகில் மயங்கி
துருவன் தான் கேட்க வந்த வரத்தை (நிலஉலக ராஜயோகம்) வெறுத்து
இறைவனது இப்பேரழகில் எப்போதும் திளைக்கும் மோட்சம் வேண்டுமென்று