3. தஞ்சையாளி நகர் மூலவர்
நரசிம்மன், கிழக்குநோக்கி வீற்றிருந்த திருக்கோலம். தாயார் தஞ்சை நாயகி தீர்த்தம் சூர்ய புஷ்கரணி விமானம் வேதசுந்தரவிமானம் காட்சி கண்டவர்கள் மார்க்கண்டேயர் சிறப்புக்கள் 1. பெருமாள் இங்கு எழுந்தருளியதும் குபேரன் விஸ்வகர்மாவை (தேவசிற்பி) அழைத்து இங்கு ஒரு நகரை நிர்மானம் பண்ணச் சொல்ல கருடன் பறப்பதுபோல் அவர் இந்நகரத்தைச் சிருஷ்டித்தார். இந்நகரில் கருடனின் சக்தி இருப்பதாகவும், கருடன் பறந்து இந்நகரத்தை காப்பதாகவும் ஐதீகம். எனவே கருடன் பறப்பதால் இந்நகரில் பாம்பு கடிக்காது என்பதும் பழமொழி. 2. ஸ்ரீநீலமேகன், ஸ்ரீமணிக்குன்னன், ஸ்ரீவீரசிங்கப்பெருமாள் இம்மூவரும் முறையே ஸ்ரீதேவி, பூதேவி, நீளா தேவியின் மயக்கிற்பட்டு இவ்விடத்திலிருந்து பக்தர்கட்கு அருளுவதாகவும் மரபு. 3. “வெட்டுங்கலியன் வேல் வலியால் மந்திரத்தைத் தட்டிப் பறித்த மணங்கொல்லை” என்று திருமங்கை ஆழ்வார் பகவானிடம் மந்திரத்தை தட்டிப்பறித்த வெண்ணாற்றங் கரையில் தான் இத்தலம் அமைந்துள்ளது. இது ஒரு கோடியிலும் அது ஒரு கோடியிலும் உள்ளது. இங்கு விண்ணாறு எனப்படுகிறது. அங்கு (நதி துவங்குமிடத்து) வெண்ணாறு எனப்படுகிறது. திருமணங் கொள்ளை தன்னில் வழிபறித்த குற்றமற்ற செங்கைய்யன் மறையுரைத்த மந்திரத்தை மாலுரைக்க அவன் முன்னே” எனவும் பாசுரமுண்டு | |