| அமோக விளைவைத் தருகிறது. எனவேதான் மண்ணில் இது போல் நகரில்லை யென்று திருமங்கையாழ்வாரும் இந்த மண்ணைப் பற்றிப் பாடினார் போலும். 10. இப்பெருமான் கையில் 5 ஆயுதங்களைக் கொண்ட பஞ்சாயுதனாகத் திகழ்கிறார், வாள், வில், சக்கரம், தண்டாயுதம், சங்கு இந்த ஐந்து ஆயுதங்களைப் பெற்றுள்ளார் “வாளும் வில்லும் வளையாழி கதை சங்கமிவை யங்கை யுடையான்” | என்கிறார் திருமங்கையாழ்வார், ஆயுதங்கள் வைத்திருப்பதைக் குறிப்பிட்டதும், திருமங்கையை நோக்கி இறைவன் நீ கையில் வைத்திருக்கும் வேலே இந்த 5 ஆயுதங்களில் சிறந்தது. எனவே ஆயுதங்களை மூட்டையாக கட்டிப் போட்டு விடுகிறேன். உன் வேலை எனக்கு கொடு கலியுகத்தில் நீ செய்யும் செயல்களால் எனது ஆயுதங்களைவிட உன்வேலே சிறந்ததென்று கூறியதாக பெரியோர் வியாக்யானம் செய்வர். 11. திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாக்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம். |