பக்கம் எண் :

164

என்று கிரேதா யுகத்தில் பிரம்மபுத்திரம் என்னும் பெயருடனும், திரேதா
யுகத்தில் பராசரம் என்னும் திருநாமத்துடனும், துவாபர யுகத்தில் சைந்திர
நகரம் என்னும் நாமத்துடனும், கலியுகத்தில் பார்க்கவ புரம் என்றும்
குறிக்கப்படுகிறது. பார்க்கவன் என்றால் சுக்கிரன் என்று பொருள்.

     பார்க்கவன் (சுக்கிரன்) தவமியற்றி சாபந்தீர்ந்ததால் பார்க்கவம் அல்லது
பார்க்கவ புரியாயிற்று. சுக்ராபுரியென்றும் வடபுராண வாயிலாயுணர்த்துவர்.
வெள்ளியங்குடி என்பதுவே தூய தீந்தமிழ்ப்பெயராம்.

     மஹாவிஷ்ணு வாமன அவதாரங்கொண்டு மாவலிச் சக்ரவர்த்தியிடம்
மூன்றடி மண் கேட்க, இதுவென்ன பிரமாதம், இந்தா பிடியும் என தாரை
வார்த்துக் கொடுத்தான். நில உலகு தனக்கடிமை என்று எண்ணிக்
கொண்டிருந்த மாவலி. தாரை வார்த்துக் கொடுக்கும்போது அம்மன்னனுக்கு
சகல சம்பத்துக்களையும் வாரியிறைத்த அசுர குல குருவான சுக்கிரபகவான்,
உண்மை நிலைபுரியாது மன்னன் இவ்வாறு செய்கிறானே என்றெண்ணி தாரை
வார்க்கும் செம்புக் குடத்தின் துவாரத்தை ஒரு பூச்சியாக உருவெடுத்து
அடைக்க, ஏதோ அடைத்திருப்பதையறிந்த பெருமாள் ஒரு சிறு குச்சியால்
துவாரம் வழியாக குத்த, ஒரு கண்ணிழந்து ஒற்றைக் கண்ணன் ஆனான்
சுக்கிரன். இந்நிகழ்ச்சியை பெரியாழ்வார்,
 

     மிக்க பெரும்புகழ் மாவலி வேள்வியில்
          தக்கதி தன்றென்று தானம் விலக்கிய
     சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய
          சக்கரக்கையனே அச்சோ அச்சோ
     சங்கமிடந்தானே அச்சோ அச்சோ - என்கிறார்.

     இழந்த நேத்திரத்தை சுக்கிரன் இவ்விடத்து தவமிருந்து பெற்றதால் இவர்
பெயராலே வெள்ளியங்குடியென அழைக்கப்படுகிறது. சுக்கிரனுக்கு பெருமாள்
இவ்விடத்தில் அருளியதைத் தான் வெள்ளியார் வணங்க விரைந்தருள்
செய்வான் என்று திருமங்கையாழ்வார் சுட்டிக் காட்டுகிறார்.

     சுக்கிரன் தவம் புரிய இவ்விடம் வருவதற்கு காரணமாக இந்த ஸ்தலம்
எப்படி ஏற்பட்டதென்றால்,

     தேவர்களுக்கு சிற்பியாகத் திகழ்ந்த விஸ்வகர்மா இறைவன்
எழுந்தருளியுள்ள எண்ணற்ற திவ்ய தேசங்களைக் கட்டி முடித்ததாயும், தனக்கு
அது போன்ற பாக்கியம் யாதும் கிடைக்கவில்லையே என்று அசுரர்களுக்குச்
சிற்பியாகத் திகழ்ந்த மயன்