மிகவும் மனம் வருத்தமுற்று பிரம்மனிடம் வேண்ட கலியுகத்தில் தனக்கு காட்சி கொடுப்பதாக கொடுத்த வாக்குறுதியும் நினைவுக்குவர மயன் அவ்விதமே செய்து கடுந்தவமியற்ற இறைவன் அவனுக்கு சங்கு, சக்ரதாரியாக, மஹாவிஷ்ணு கோலத்தில் காட்சியளித்தார். தனக்கு இந்தவிதமான திருக்கோலக்காட்சி வேண்டாமென்றும், இராமாவதாரத் திருக்கோலத்தையே தான் தரிசிக்க விரும்புவதாய் மயன் கூற, தம்கரத்திலிருந்த சங்கு, சக்கரங்களைக் கருடனுக்கு கொடுத்துவிட்டு வில், அம்புகளுடன், அலங்காரக் கோலத்துடன் கோலவில் ராமனாக காட்சியளித்தார். எனவேதான் இப்பெருமானுக்கு கோலவில்லி ராமன் என்னும் பெயர் உண்டானது. 108 திவ்ய தேசங்களிலே இங்குதான் கருடாழ்வாருக்கு 4 கரங்கள் உள்ளது. மூலவர் கோலவில்லி ராமன், புசங்க சயனம் கிழக்கு திருமுக மண்டலம். உற்சவர் சிருங்கார சுந்தரன், (தன்னை அழகுபடுத்திக் கொள்வதில் இப்பெருமானுக்கு விருப்பம் அதிகம்) தாயார் மரகதவல்லி தீர்த்தம் சுக்ரதீர்த்தம், ப்ரஹமதீர்த்தம், பரசுராமதீர்த்தம், இந்திர தீர்த்தம். ஸ்தல விருட்சம் கதலீ (வாழை) விமானம் புஷ்கலா வர்த்தக விமானம் காட்சி கண்டவர்கள் சுக்கிரன், பிரம்மா, இந்திரன் பராசுரர், மயன் சிறப்புக்கள் 1. தனக்கும் கோலவில்லி ராமனாக காட்சியருள வேண்டுமென்று திருமங்கையாழ்வார் வேண்ட அவ்விதமே காட்சியளித்தார் என்பது இப்பெருமானுக்கு |