பக்கம் எண் :

166

உண்டான தனிச்சிறப்பு. அதாவது உண்மையான அடியார்களின்
கோரிக்கையை விரைந்து நிறைவேற்றுபவர்.

     2. இங்குள்ள கருடாழ்வார் 4 கரங்களுடன் கைகளில் சங்கு
சக்கரங்களும் கொண்டதாகக் காட்சித்தருவது வேறு எந்த ஸ்தலத்திலும்
இல்லை. சங்கு சக்கரங்களைப் பெற்றதால் பெருமாளின் சக்தியே தன்னிடம்
வரப்பெற்றவராய்த் திகழ்கிறார் இந்த கருடாழ்வார்.

     3. இங்கு கோவிலில் கருங்கல் தரையில் செங்கதலி வாழை முளைத்து
வருடத்திற்கு ஒரு தார் போட்டு வாழையடி வாழையாக இருந்துவரும்
காட்சியை இன்றும் காணலாம். இவ்வாழையே ஸ்தலவிருட்சமாகவும் ஆகிறது.

     4. வெள்ளியங்குடிக்கு அருகாமையில் சேங்கானூர் என்ற ஊர் உள்ளது.
இதுதான் வைணவமேதை பெரியவாச்சான் பிள்ளையின் அவதார ஸ்தலம்.

     5. நவக்கிரகங்களுக்கு நடுநாயகமாகத் திகழ்கிறது. இத்தலம்.
இவ்விடத்தைச் சுற்றியே 9 நவக்கிரக ஸ்தலங்கள் உள்ளன.

     சூரியன்   - சூரியனார் கோவில்
     சந்திரன்   - சந்திரன். இந்தளூர் (மாயவரம்)
     செவ்வாய்  - வைத்தீஸ்வரன் கோவில்
     புதன்     - திருவெண்காடு
     வியாழன்  - ஆலங்குடி
     சுக்கிரன்   - வெள்ளியங்குடி
     சனி       - திருநள்ளாறு
     ராகு, கேது - வாஞ்சியம்

     6. எண்ணற்ற மகான்களும், அஹோபில மடம் ஜீயர் ஸ்ரீமத் ஆண்டவன்
சுவாமிகளும், காஞ்சி சங்கராச் சாரியாரும் தங்கியிருந்து திருப்பணி
மேற்கொண்ட ஸ்தலமாகும் இது.

     7. திருமங்கையாழ்வார் மட்டும் 10 பாசுரங்களில் மங்களாசாசனம்
செய்துள்ளார்.