பக்கம் எண் :

167

23. திருவழுந்தூர் (தேரழுந்தூர்)

     வெள்ளத்துள் ஓராலிலை மேல் மேவி
          அடியேன் மனம் புகுந்தென்
     உள்ளத்துள்ளும் கண்ணுள்ளும்
          நின்றார் நின்ற ஊர் போலும்
     புள்ளுப் பிள்ளைக்கு இரைதேடி
          போனகாதல் பெடையோடும்
     அள்ளல் செறுவில் கயல் நாடும்
          அணியார் வயல் சூழ் அழுந்தூரே
                   (1591) பெரியதிருமொழி 7-5-4

     பிள்ளைக்கு இரைதேடித் தன் பெடையோடு செல்லும் பறவைகளின்
காலடிச் சத்தத்தைக் கேட்டு நீர்சூழ்ந்த கழனிகளில் சரேல்சரேலென்று மீன்கள்
பாயக்கூடிய அழகிய வயல்கள் சூழ்ந்த அழுந்தூரில், ஆலமரத்திலை மேல்
துயில் கொண்டு, தன் உள்ளத்தில் உறைகின்ற பிரான் நின்றவூர் இதுதான்
போலும் என்று திருமங்கையாழ்வார் திருவாய் மலர்ந்தருளிய
இத்திருவழுந்தூர் தஞ்சை மாவட்டத்தில் மாயவரத்திலிருந்து கும்பகோணம்
செல்லும் பாதையில் இருக்கிறது. (மாயவரம் - கும்பகோணம் பாதையில்
இரண்டாவது ரயில் நிலையம்)

வரலாறு

     இத்தலத்தைப் பற்றி விஷ்ணு புராணம் மிகவும் சிலாகித்துப் பேசுகிறது.
இதைப்பற்றி பல புராண வரலாறுகள் இருப்பினும் விஷ்ணு புராணத்தில் வரும்
கீழ்க்கண்ட கதையே பிரதானமாக எடுக்கப்பட்டுள்ளது.

     கோகுலத்தில் கோபாலர்களுடன் பசுக்களை மேய்த்துக் கொண்டிருந்த
கண்ணன். ஒரு நாள் பசுமந்தையை, ஓரிடத்தில் நிறுத்தி விட்டு யமுனை
நதிக்குச் சென்றிருந்த போது, அப்பசுமந்தையை பிரம்மா தேரழுந்தூருக்கு
ஓட்டி வந்து விட்டதாகவும், இச்செயல் அறிந்த மாயக் கண்ணன். உடனே
அதே போன்ற பசுமந்தையை அவ்விடத்திலே படைத்து விட, தன் தவறை
உணர்ந்த பிரம்மா கண்ணன் முன் தோன்றி, தேரழுந்தூரில் கோயில் கொள்ள
வேண்டுமென்று விண்ணப்பிக்க, அதையேற்று “ஆமருவி நிரை மேய்க்கும்
அமரர் கோமானாக” வந்தமர்ந்தான் என்பது வரலாறு. இதற்குச் சான்றாக
இங்குள்ள