உற்சவப் பெருமாளுக்கு முன்புறம் கன்றும் பின்புறம் பசுவும் அமைந்துள்ள பேரழகும் எழுத்தில் அடக்கும் தன்மை பெற்றதல்ல. மூலவர் மூலவரின் திருநாமம் தேவாதிராஜன் என்பதாகும். வட மொழியில் கோசகன் என்று இப்பெருமாளைக் குறிக்கின்றனர். கோசகன் என்பதின் தமிழாக்கமே ஆமருவியப்பன் என்பதாகும். இப்பெயரும் மூலவருக்குண்டு. தாயார் செங்கமல வல்லி உற்சவர் ஆமருவியப்பன். விமானம் கருட விமானம் தீர்த்தம் தர்சன புஷ்கரிணி, காவேரி காட்சி கண்டவர்கள் தர்மதேவதை, உபரிசரவசு, காவேரி, கருடன், அகத்தியர், மூலவர், உற்சவர், தாயார், மூவரும் கிழக்கே திருமுக மண்டலம். ஊர்ப்பெயர் காரணம் தனது தவ வலிமையால் விமானத்துடன் ஆகாசத்தில் சஞ்சரிக்கும் தன்மை பெற்ற உபரிசரவசு என்னும் அரசன் தேவர்கட்கும் முனிவர்கட்கும் நேர்ந்த ஒரு விவாதத்தில் ஒருதலைப் பட்சமாகத் தீர்ப்பளிக்க, இதனால் கோபமுற்று ரிஷிகளால் சபிக்கப்பட்டு விமானத்துடன் பூமியில் விழுகையில் இங்குள்ள குளத்தில் அவன் தேர் அழுந்தியமையால் இதற்குத் தேரழுந்தூர் என்ற பெயருடயதுயாயிற்றென்பர். கிருஷ்ணாரண்யம் (கிருஷ்ணின் காடு) என்பது புராணம் சூட்டும் பெயர். சிறப்புக்கள் 1. மொத்தம் 11 சந்நிதிகள் உள்ள திருத்தலம். 2. கவிச் சக்ரவர்த்தி கம்பன் பிறந்தது இந்த தேரழுந்தூரேயாகும். இப்பெருமான் மீது கம்பன் அளவற்ற பக்தி கொண்டிருந்தார். கம்பருக்கும் அவர் மனைவிக்கும் இக்கோவிலில் சிலைகள் உள்ளன. |