கிழக்கு நோக்கிச் சிரிப்புடன் கூடிய வாசுதேவனாகவும் தெற்கு நோக்கிச் சிங்கமுகம் கொண்ட சங்கர்ஷனனாகவும் வடக்கு நோக்கிய வராகமுகம் கொண்ட பிரத்யுமனனாகவும் மேற்கு நோக்கிய ருத்ரமுகம் கொண்ட அனிருத்னாகவும் | தம்மை வ்யூகப்படுத்தி சர்வ திக்குகளையும் நோக்கியுள்ளார். தேவர்கள் தமக்குத் துன்பம் நேரிடும்போதெல்லாம் இந்தப் பாற்கடலின் கரையில் வந்து நின்று ஸ்ரீமந் நாராயணனைப் பற்றியெழுப்பி தமது முறையீட்டினைத் தெரிவித்து அபயக்குரல் கொடுப்பர். எம்பெருமானும் அபயமளிப்பான். எனவே இந்த உலகிற்கு கூப்பாடு கேட்கும் உலகு என்று பெயர். இந்த வ்யூக வாசுதேவனுடன் மற்றைய மூன்று உருவங்களும் பிரளய காலத்தில் ஐக்கியமாகி விடுகின்றன என்பது ஐதீஹம். 3) விபவம் விபவம் என்ற வடசொல்லுக்கு இறங்கி வருதல் என்று பொருள். பக்தர்கட்காகவும் உலகுய்யவும் - இரண்டிடங்களிலிருந்து இறங்கி வருதல், ஸ்ரீஇராமனாகவும், ஸ்ரீகிருஷ்ணனாகவும், பூவுலகில் தோன்றிய அவதாரங்களை விபவம் என்பர். இவைகள் பூர்ணாவதாரம், அமிசாவதாரம், ஆவேச அவதாரம் என்று வகைப்படும். இராம, கிருஷ்ண, வாமன, பரசுராம அவதாரங்கள் பூர்ணவதாரம். மச்சாவதாரம், வராக அவதாரம் போன்றன அமிசாவதாரம். நரசிம்மம் - ஆவேச அவதாரம். 4) அந்தர்யாமித்வம் இதில் ஒவ்வொரு ஜீவாத்மாவின் உள்ளிருந்தும் அதைத் தாங்கி நிற்பதாக ஐதீஹம். அந்தர்யாமியாக - மறைமுகமாக (உள்ளுக்குள் உணர்வாய், உணர்வுக்குள் உயிராய்) மானிடர்களின், ஞானிகளின், பக்தர்களின் உள்ளத்திலிருந்து தம் சக்தியை வெளிப்படுத்தும். 5) அருச்சை நம்மைப்போன்ற சாமான்ய மனிதர்கள் பரம், வ்யூகம், விபவம், அந்தர்யாமித்வம் என்னும் இவைகளை கண்ணால் காண்பதும், கருத்தால் தீண்டலும் அரிதே. ஆம் பரமபதத்திற்குச் செல்ல நாம் நித்ய சூரிகளாக இல்லை. வ்யூகத்தைக் காண நாம் |