பக்கம் எண் :

177

கொண்டிருந்தனர் என்பதை கல்வெட்டுகள் உணர்த்துகின்றன.

     திருக்கோட்டியூர் பெண்ணொருத்தி இக்கோவிலுக்குச் செய்த
நிலதானத்தைப் பற்றி வீரபாண்டியனின் தலைக்கொண்ட பரகேசரி வர்மனான
இரண்டாம் ஆதித்தனின் மூன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுக் கூறுகிறது.

     இவனாட்சியின் 12ஆம் ஆண்டு வெட்டப்பட்ட கல்வெட்டு கொல்லம்
என்னும் ஊரைச் சேர்ந்த வணிகன் இக்கோவிலுக்குச் செய்த விளக்கு
தானத்தைப் பற்றிக் கூறுகிறது.

     7. திருமங்கையாழ்வாரால் மட்டும் தலைப்பில் இட்ட பாடலால்
மங்களாசாசனம் செய்யப்பட்டதலம். பெரிய திருமடலிலும் (2674 இல் 134)
இத்தலத்தை திருமங்கை மீளவும் மங்களாசாசனம் செய்கிறார். கதிர்மதியம்
என்று ஆண்டாள் திருப்பாவையில் கூறியுள்ளதையும் இப்பெருமானுக்கிட்ட
மங்களாசாசனமாகக் கொள்ளலாம்.

     கதிர்மதியம் என்று முதலில் ஆண்டாள் எம்பெருமானை
மங்களாசாசித்தார். கதிர்மதியம் (474) என்றதில் நிலவிற்கு மட்டுமே
எம்பெருமானின் திருமுகத்தை உவமானப்படுத்தினால் போதுமோ என்று
நினைத்தார்போலும் உடனே திங்களும் ஆதித்தயனும் எழுந்தாற்போல் (495)
என்றாரோ.

     8. தலைச்சங்க நாண்மதியத்தைப் பற்றிக் கீழ்காணும் அருமையான
பாடல் ஒன்று காணப்படுகிறது.
 

     செப்புங்கால் ஆதவனும்
          திங்களும் வானும் தரையும்
     அப்புங் காலும் கனலும்
          ஆய் நின்றான் கைப்பால்
     அலைச்சங்கம் ஏந்தும்
          அணி அரங்கத்து அம்மான்
     தலைச்சங்க நாண்
          மதியத்தான்.

     9. சுமார் 40 ஆண்டுகளாக யாரும் செல்ல முடியாதபடி முட்புதர்களாலும்,
கள்ளிச் செடிகளாலும் மூடப்பட்டு