உற்சவர் அளத்தற்கரியான் தீர்த்தம் இந்திர புஷ்கரணி, ருத்ர புஷ்கரணி காட்சி கண்டவர்கள் இந்திரன், 11 சிவன்கள் விமானம் ப்ரணவ விமானம் சிறப்புக்கள் 1) பத்ரிகாச்ரமத்தில் இருக்கும் ஸ்ரீமந் நாராயணனே இங்கு 11 திருமால்களில் ஒருவராக வந்து நின்றார். பத்ரியிலும் நாராயணன் என்ற பெயரிலேயே அமர்ந்த திருக்கோலம், இங்கும் அதே நிலை. பத்ரிகாஸ்ரமத்தில்தான் ஸ்ரீமந்நாராயணன் திருமந்திரத்தை உபதேசித் தருளினார். எனவேதான் எமக்கும் அந்த மந்திரத்தை யருளாயென தேவர்கள் இங்கு வந்து வேண்டுகின்றனர். என்பது ஐதீகம். திருமந்திரம் உபதேசித்த பெருமாளே இங்கு எழுந்தருளியிருப்பதால் இது பத்ரிக்குச் சமமான ஸ்தலம். 2) எம்பெருமான், சிவனின் நடனத்தை நிறுத்த, திருநாங்கூரில் பிரவேசித்தபோது இந்த ஸ்தலத்தினருகில் சிவன் நடனம் புரிந்துகொண்டு இருந்ததாகவும், ஸ்ரீமந் நாராயணனைப் பரமபத நாதனாகக் கண்ட பரமேஸ்வரன் தன்னைப்போல் 11 உருக்கொண்டு பெருமாள் காட்சி தர வேண்டுமென விண்ணப்பம் செய்ய, அவ்விதமே எம்பெருமான் 11 திருக்கோலங்களில் காட்சி தந்து ஒரு சிவனை அழைத்து ஒரு சிவனுக்குள் செலுத்தி பிறகு இன்னொரு சிவனை அழைத்துச் செலுத்தி இந்த விதமாக 11 சிவன்களை ஒன்றாக்கி நிறுத்தினார் என்பது ஐதீஹம். இந்த மணிமாடக்கோவில் நாராயணப் பெருமாளே பத்து திருமேனிகளை எடுத்துக் கொண்டு தாம் ஒரு திருமேனியாக வந்ததாயும் கூறுவர். 3) திருநாங்கூர் கருடசேவைத் திருவிழா இந்த ஸ்தலத்திற்கு முன்புதான் நடைபெறுகிறது. 11 எம்பெருமான்களும் இங்கு எழுந்தருள திருமங்கையாழ்வார் ஒவ்வொரு பெருமானையும் வலம்வந்து (மாலை மரியாதைகளுடன்) |