6) எம்பெருமான் திருமணக்கோலத்தில் மணவாளனாக இத்தலத்திற்கு எழுந்தருளி (ஆலி மணவாளனாக) பூர்ண மகரிஷியிடம் வளர்ந்த திருமகளை மணம் புரிந்து கொண்டு திருவாலிக்கும், திருநகரிக்கும் இடைப்பட்ட வேதராஜபுரம் என்ற இடத்தில் வரும்போது திருமங்கையாழ்வார் மறித்து வழிப்பறி நடத்த, எம்பெருமான் திருமங்கையின் செவிகளில் அஷ்டாச்சர மந்திரத்தை உபதேசம் செய்தார். எம்பெருமான் பத்ரியில் (பதிரகாசிரமத்தில்) தானே ஆச்சாரியனுமாய் தானே சீடனுமாய் நின்று திருமந்திர உபதேசம் செய்தார். அந்தக் குறைதீர ஸ்ரீபதரியின் நாராயணப் பெருமாளே ஸ்ரீவயலாளி மணவாளப் பெருமாளாக இங்கு எழுந்தருளி திருமங்கை மன்னனுக்கு திருமந்திர உபதேசம் செய்து அதற்கு எல்லை நிலமான அர்ச்சாவதாரங்களையும் காட்டிக்கொடுத்து திருமங்கை யாழ்வாரையும் ஆட்கொண்டார். எட்டிழையாய், மூன்று சரடாய், இருப்பதொரு மங்கள சூத்திரத்தை (ஓம் நமோ நாராயணா என்று 8 எழுத்தாக) ஓம், நமோ, நாராயணாய என்று மூன்று சரடாய் திருமங்கையாழ்வாருக்கு காட்டின இடமாகையால் இதனைத் திருமணங்கொல்லை என்று பெரியோர் அருளிச் செய்வர். இதன் பெருமையை மணவாள மாமுனிகளும் இதுவோ திருமணங்கொல்லை. இங்கேதான் வெட்டுங் கலியன் வாள் வலியால் வெறுட்டி நெடுமாலை எட்டெழுத்தும் தட்டிப் பறித்த இடம் என்று ஈடுபட்டு அனுபவிப்பர். இங்கு (வேதராஜபுரத்தில்) ஆண்டுதோறும் பங்குனி உத்திர முதல் நாள் இரவு திருமங்கை மன்னன் ஸ்ரீவயலாளி மணவாளப் பெருமானை வழிமறித்து திருவேடுபறி நடத்தி திருமந்திர உபதேசம் பெறும் விழா சிறப்பாக நடைபெறுகிறது. வேடுபறி மண்டபம் என்று வேடுபறி (எம்பெருமானிடம் திருமங்கை கொள்ளையிட்ட இடத்தில்) நடந்த இடத்தில் ஒரு மண்டபமும் உள்ளது. பத்ரிகாச்ரமத்துக்கு அடுத்தபடியாக எம்பெருமான் இரண்டாவது முறையாகத் தாமே இவ்விடத்து திருமந்திர உபதேசம் செய்ய எழுந்தருளியதால் இத்தலம் (திருவாலி) பத்ரிகாச்ரமத்துக்கு சமமானதாய்க் கருதப்படுகிறது. 7) இந்த திருவாலி எம்பெருமானே திருமணக்கோலத்தில் மணவாளனாக (மாப்பிள்ளையாக) வரும்போது திருமங்கையாழ்வார் கொள்ளையிட வர, அவருக்கு |