திருமால் திருமகளைத் தேடி எங்கும் அலைந்து காணாமல் இவ்விடம் வந்து சேர்ந்தார். லட்சுமிக்குத் தாமரை மிகவும் உவப்பாதலால் ஒரு வேளை இங்கு மறைந்திருக்கலாமென்று தாமரைகளை உற்று நோக்கினார். எல்லாத் தாமரைகளும் இதழ் விரிக்காது ஒரே மாதிரி மொட்டாக இருக்கக்கண்ட எம்பெருமான் தனது வலது கண்ணை மூடி இடது கண்ணைத் திறந்தார். (திருமாலின் வலது கண் சூரியன் இடது கண் சந்திரனல்லவா) எல்லா தாமரைகளும் சந்திரன் வந்துவிட்டது. சந்திர ஒளி வந்துவிட்டது என்று எண்ணி அலர்ந்துவிட்டது. அதில் ஒரேயொரு தாமரை மட்டும் மலராது நிற்க இதில்தான் ஸ்ரீஇருக்க வேண்டுமென நினைத்த எம்பெருமான் ஓடி வந்து தாமரை புஷ்பத்திற்குள் இருந்த ஸ்ரீயை ஆலிங்கனம் செய்துகொண்டார். எனவே இது ஆலிங்கன புரியாகவும், ஸ்ரீவந்து நின்றதால் ஸ்ரீபுரியும் ஆயிற்று. தமிழில் திருநகரியானது. (ஏற்கனவே ஒரு ஆலிங்கனம் நடந்ததும் இவ்விடத்தில்தான் (திருவாலியில்) எனவே இரண்டும் சேர்ந்து வரலாற்றுப் பின்னணியில் ஒரே திவ்ய தேசமாக திருவாலி திருநகரி என்றாயிற்று. இத்திருக்கோலத்தைக் கண்ட கர்த்தம ப்ராஜாபதி இதுதான் தருணம் என்று இருவரையும் விடாதே பற்றிக்கொண்டு மோட்சமளிக்க வேண்டினார். எம்பெருமான் ப்ரம்ம புத்திரனை நோக்கி உனக்கு இப்போது மோட்சம் கிடையாதென்றும் அது கலியுகத்தில்தான் சித்திக்கும் என்றும், அருளி வேறுயாதாகிலும் வேண்டிக்கொள் என்று சொல்ல, இதே திருக்கோலத்தில் இங்கேயே எழுந்தருளியிருக்குமாறு வேண்ட அஷ்டாச்சர விமானத்துடன் எழுந்தருளினார். திரேதாயுகத்தில் இவரே உபரி ஸர வஸு என்னும் மன்னனாக பிறந்தார். (வசு என்பது பெயர். ஸரம் - என்றால் அலைதல் உபரியென்றால் ஆகாய மார்க்கம். ஆகாய சஞ்சாரம் செய்பவர் என்பது பொருள்) இவர் மிகச்சிறந்த தபஸ்வியாகவும், கடுமையான பக்தனாகவும், பெரிய பராக்ரமசாலியாகவும் விளங்கி தேவர்களுக்காக இந்திரனுக்கு போரில் உதவி அவனுக்கு வெற்றியைத் தேடித் தந்து இந்திரனிடமிருந்து தர்சனம் என்னும் சக்தியினையும், அங்கஜம் என்னும் தோள்வளையினையும் பரிசாகப் பெற்றார். இவர் ஒரு சமயம் விமானத்தில் பறந்து வரும்போது இந்த ஸ்ரீபுரிக்கு மேலாக வரும்போது மேற்கொண்டு செல்லமுடியாமல் விமானம் தடைபட்டு நிற்க இவ்விடத்தின் மகிமையினையும், விமானம் பறக்காது தடைபட்டமைக்கான |