காரணத்தையும் அறியுமாற்றான் இவ்விடத்திலேயே திருமாலைக் குறித்து கடுந்தவம் செய்யலாயினார். எம்பெருமான் பிரத்யட்சமானதும் இவருக்குப் பூர்வ ஜென்மம் புலப்படவே, எம்பெருமானைப் பலவாறு போற்றித் துதித்து முக்தியளிக்க வேண்டுமென்று கேட்க அது கலியுகத்தில் கிடைக்கும் என்று கூறி மறைந்தார். இதன் பிறகு உபரி ஸர வசு இக்கோவிலுக்கு பல கைங்கர்யங்களை செய்து நெடுங்காலம் இங்கு தங்கியிருந்து சென்றார். துவாபுரயுகத்தில் காவிரி சங்கமமாகும் இடத்தில் ககூஸ்தபட்டினம் என்னும் நாட்டையாண்ட வஜ்ரகோஷன் என்னும் மன்னனுக்குப் புத்திரப் பேறில்லை. இவருக்குச் சங்க பாலன் என்னும் ஒரு மந்திரி இருந்தார். அவருக்கு வைரமேகன், நிதிபாலன் என்ற இரண்டு புத்திரர்கள் இருந்தனர். வஜ்ரகோஷன் தனக்குப் புத்திரனில்லாமையால் சங்க பாலனின் முதல் புத்திரன் வைரமேகனை நாட்டின் இளவரசனாக்கி, நிதிபாலனை மந்திரியாக்கினான். இவ்விதம் ராஜ்ய பரிபாலனப் பொறுப்புகளைத் தமது புதல்வர்கள் ஏற்றுக் கொண்டபடியால் சங்கபாலன் திக்விஜயம் மேற்கொண்டான். திக் விஜயத்தின் போது இந்த லட்சுமிபுரியாகிய வில்வாரண்ய மகாத்மியத்தைக் கேள்விப்பட்டு இங்கு தங்கி இவ்விடத்தே மஹாரிஷிகளை வைத்து பெரிய யாகம் செய்ய, யாகத்தின் அவிர்ப்பாகத்தை ஏற்க திருமால் நேரில் தோன்ற சங்கபாலன் தனக்கு (ஸாயுஜ்யம்) மோட்சம் வேண்டுமென்று கேட்க அது கலியுகத்தில்தான் என்று எம்பெருமான் கூற அவ்வாறாயாயின் இதே கோலத்தில் எம்பெருமான் இங்கு நித்யவாஸம் செய்ய வேண்டுமென்றும் இவ்விடத்தில் ஊரும், நாடும், நகரமும் உண்டாக வேண்டும் என்று பிரார்த்திக்க, அவ்வாறே ஆகட்டும் என்று கூறி கூப்பிடு தூரத்தில் கடல் இருந்தமையால் எம்பெருமான் மேற்கு நோக்கி நின்றருளினார். இந்த கலியுகத்தில் திருநகரிக்கு அருகாமையில் உள்ள குறையலூரில் சோழனின் ஆளுகைக்குட்பட்ட சேனைத் தலைவனுக்கு ஒரு புத்திரன் பிறந்தார். இவரது திருமேனி நீலவண்ணமாயிருந்ததால் இவருக்கு நீலமேகன் (நீலன்) என்றே பெயரிட்டழைத்தனர். இளம் வயதில் காமவேட்கையில் ஈடுபட்டுத் திரியும் ஸ்திரிலோலராக இருந்து வருங்காலையில், திருவெள்ளக்குளத்தில் அப்சரஸாக வந்து திருவாலியில் வளர்ந்து வரும் குமுதவல்லியாரைக் கேள்விபட்டு அவரைத் திருமணம் செய்து தரச் சொல்லி கேட்க, குமுதவல்லியோ திருவிலச்சினை பெற்று |