பக்கம் எண் :

222

துவாதச திருநாமங்கள் அணிந்த பாகவதனுக்கேத்தான் வாழ்க்கைப்பட முடியும்
என்று சொல்ல, அவ்விதமே பரமபாகவதனாக மாறி வர, இவரை நோக்கிய
குமுதவல்லி எனக்கு ஒரு விரதமுண்டு, அதாவது ஒரு வருட காலத்திற்கு
தினமும் ஆயிரம் ஸ்ரீவைஷ்ணவர்கட்கு அன்னதானம் (ததியாரதனம்) செய்ய
வேண்டுமென்றும் இவ்விதம் முடிந்த பின்னரே நான் தங்களுக்கு பத்தினியாக
முடியும் என்று கூற நீலமேகனும் அதற்கியைந்து ததியாரதனத்தின் பொருட்டு
பொருள் எல்லாஞ்செலவு செய்து கப்பம் கட்ட பணமில்லாதபோது சோழனால்
நறையூரில் (நாச்சியார் கோவிலில்) சிறைவைக்கப்பட்டு காஞ்சிபுரத்திற்கு
வாரும், மாதனம் தருகிறோம் என்று சொல்லி அவ்வண்ணமே வேகவதி
நதிக்கரையில் தனம் கண்டெடுத்து மன்னனுக்கு கப்பம் கட்டிவிட்டு, மீண்டும்
ததியாரதனம் செய்து வரும்போது மீண்டும் பொருளின்றிப் போகவே,
வழிப்பறியில் இறங்கலானார்.

     இந்நிலையில் வைகுண்டத்தில், தனது பக்தன் படும்பாட்டைக் கண்டு
மனமிரங்கி பிராட்டி எம்பெருமானை நோக்கி நீலனுக்கு உடனே
அருள்பாலிக்க வேண்டுமென்று கேட்க, சரி என்று ஒப்புக் கொண்டு,
திருமகளை பூர்ண மஹரிஷியின் புத்திரியாக வளரக் கட்டளையிட்டு
திருமணப் பருவம் வந்துள்ளபோது ஆலிநகருக்கு மணவாளனாகவந்து
திருமணம் முடித்து பொற்குவியல்களுடன் திருநகரி நோக்கிச் சென்று
கொண்டிருக்க ஏதோ பெரிய திருமணக் கோஷ்டி செல்வதைக் கேள்வியுற்று
திருமங்கை வேதராஜ புரத்திற்கே வந்து எம்பெருமானை வழி மறித்து
பொருட்களைக் கொள்கையிட்டு அதை ஒரு மூட்டையாகக் கட்டித் தூக்க
முயன்றபோது, தன் சக்தி முழுவதும் பிரயோகித்ததில், தூக்க முடியாமல்
போக, இவன் ஏதோ மந்திரம் போட்டுவிட்டான் என்று தன் வாளினை
உருவி, இம்மூட்டையைத் தூக்க முடியாமல் போனதற்கான மந்திரத்தை
எனக்கு கூறு என்று கேட்க, வா சொல்கிறேன் என்று அழைத்து நீலமேகனின்
செவிகளில் அஷ்டாச்சர மந்திரத்தைக் (எட்டெழுத்து மந்திரத்தை) கூற
அவருக்கு ஞானமும் பூர்வ ஜென்மமும் புலப்பட திருமங்கை ஆழ்வாராகி
(குமுதவல்லி என்னும் மங்கையால் எம்பெருமானின் பக்தியில் ஆழ்ந்தமையால்
மங்கையாழ்வாரானார்) திக்விஜயம் மேற்கொண்டு, திவ்ய தேசங்களைச்
சேவித்து மங்களாசாசனம் செய்து இறுதியில் திருக்குறுங்குடி சென்று திருவரசு
எய்தினார்.

     வயலாலி மணவாளனும், திருமகளும் பக்தனின் பொருட்டு இவ்விரண்டு
ஸ்தலங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டமையால் திருமங்கையின்
வரலாறும் இவ்விரண்டு திவ்ய