தேசங்களுடன் சேர்ந்து ஒரே திவ்ய தேசமாக திருவாலி திருநகரி ஆயிற்று. மூலவர் வேதராஜன் (வயலாலி மணவாளன்) வீற்றிருந்த திருக்கோலம், மேற்கே திருமுகம். உற்சவர் கல்யாண ரங்கநாதன் தாயார் அம்ருத வல்லி காட்சி கண்டவர்கள் திருமங்கையாழ்வார் சிறப்புக்கள் 1) திருமங்கையாழ்வாரால் பூஜிக்கப்பட்ட சிந்தனைக்கினியான் என்னும் விக்ரகம் இராமானுஜர் காலத்தில் திருக்குறுங்குடியிலிருந்து கொண்டுவரப்பட்டு இத்தலத்தில் வைக்கப்பட்டுள்ளது. சிந்தனைக்கினியானின் திருவாரதனத்திற்கு நந்தவனமாக இருந்த பகுதி இப்போதும் சிந்தனைக்கினியான் தோட்டம் என்றே அழைக்கப்படுகிறது. 2) திருமங்கையாழ்வாரும், குலசேகராழ்வாரும் மங்களாசாசனம் செய்துள்ளனர். 3) திருஞான சம்பந்தரை வாதில் வென்று அவரிடம் பெற்ற வேலோடு ஒரு வேடனைப் போல் திருமங்கை இங்கு காட்சியளிப்பது காணத் தெவிட்டாத பேரழகாகும். 4) திருமங்கையாழ்வார் திருக்குறுங்குடியிலிருந்தபோது தம்மைப் போலவே ஒரு பிம்பம் (தங்கத்தால் விக்ரகம்) செய்து தான் அப்பிம்பத்தின் நேரில் நின்று கொண்டு வா என்று அழைக்க, அப்பிம்பம் நடந்து வர அதனைக் கட்டித் தழுவி தம் சக்தி முழுவதையும், அப்பிம்பத்தில் செலுத்திவிட்டு அதன் பிறகே திருமங்கையாழ்வார் திருவரசு (மோட்சம்) எய்தினார். இப்பிம்பம்தான் இப்போது திருநகரியில் வைக்கப்பட்டு நித்ய பூஜைகளும் நடைபெறுகின்றன. |