பக்கம் எண் :

226

விமானம்

     சோபனவிமானம்

காட்சி கண்டவர்கள்

     வசிஷ்டர்

சிறப்புக்கள்

     1) திருநாங்கூருக்கு எழுந்தருளின 11 எம்பெருமான்களில் இவர்
திருவிடவெந்தை (திருவடந்தை) எம்பெருமான் ஆனார்.

     2) உற்சவ மூர்த்தியின் பெயரால் மாதவப்பெருமாள் கோவில் என்றே
இத்தலம் அழைக்கப்படுகிறது. மூலவருக்குண்டான தெய்வநாயகன் என்னும்
திருநாமம் 108 திவ்யதேச எம்பெருமான்களில் நடுநாட்டுத் திருப்பதியான்
திருவஹிந்திரபுரத்துக்கும் பாண்டிநாட்டுத் திருப்பதிகளுள் ஒன்றான
வானமாமலைக்கும் (திருச்சீரவரமங்கை) உண்டு.

     இதனால்தானோ என்னவோ இத்தலத்து மூலவர் திருநாமத்தினின்றும்
உற்சவரின் திருநாமமான மாதவப் பெருமாள் பெயராலேயே இத்தலம்
வழங்கப்படுகிறது. திருமங்கையும் தமது பாசுரத்தில் தடமண்ணி தென்கரை
மேல் மாதவன்றானுரையுமிடம் என்று மங்களாசாசனம் செய்துள்ளார்.

     3) வசிட்டர் இத்தலத்து எம்பெருமானை குறித்து தவமிருந்து
பெருமாளைக் கண்டதாக ஐதீஹம்.

     4) திருமங்கையாழ்வார் மட்டும் 10 பாக்களால் மங்களாசாசனம்
செய்துள்ளார்.

     5) இப்பெருமானும் கருட சேவைக்கு எழுந்தருள்வார்.

     6) கடல் மகள் நாச்சியார் என்று அழகிய செந்தமிழ் சொல்கொண்ட
நாச்சியார் ஆவார், இத்தலத்துப் பிராட்டி.