ச்வேத வத்ஸ சிரஞ்சீவிந் ஜிதோ ம்ருத்யுஸ்தவயா அதுநா ம்ருக்யுஞ்ஜயேன மந்த்ரேண ப்ரிதோஸ்மி தவஸி வ்ரத தீர்க்கமாயு ப்ரதாஸ்யாமி கல்பாந்தஸ் தாயி தேந்நாப விநோசோ ந பவேத்தாத மார்க்கண்டேயே ஸமோவப - என்பது புராணம். | திருமங்கையாழ்வார் வேங்கடவனையே இத்தலத்தில் காண்கிறார். வேங்கடவனே இத்தலத்தில் எழுந்தருளியிருப்பதாகவும், திருப்பதி ஸ்ரீனிவாசனுக்கு இப்பெருமானை அண்ணன் எனவும் விளிக்கிறார். திருமங்கையாழ்வார் தமது துன்பங்களைப் போக்குமாறு கீழ்க்கண்டவாறு வேங்கடவனை வேண்டுகிறார். கண்ணார் கடல் சூழி லங்கை இறைவன்றன் திண்ணாகம் பிளக்கச் சரஞ்செல வுய்த்தாய் விண்ணோர் தொழும் வேங்கட மாமலை மேய அண்ணா, அடியேனிடரைக் களையாயே - 1038 | என்று திருப்பதி வேங்கடவனை அண்ணா என்றழைத்து தன் துன்பத்தைப் போக்குமாறு வேண்டுகிறார். திருவெள்ளக்குளத்துப் பெருமாளை வேண்டும்போது கண்ணார் கடல் போல் என்ற சொற்றொடராலேயே மங்களாசாசனத்தை ஆரம்பித்து இப்பெருமாளையும் அண்ணா அடியேனிடரைக் களையாயே என்கிறார். இதோ அப்பாடல், கண்ணார் கடல்போய் திருமேனி கரியாய் நண்ணார் முனை வென்றி கொள்வார் மன்னு நாங்கூர் திண்ணார் மதிள்சூழ் திருவெள்ளக்குளத்துள் அண்ணா, அடியேனிடரைக் களையாயே - 1308 | திருவேங்கிடமுடையானிடத்தில் அடியேனிடரைக்களையாயே என்று முன்னமே தன்னால் வேண்டப்பட்டது திருவெள்ளக்குளத்து ஸ்ரீனிவாசனால் நிறைவேறினமையால் அவருக்கு இவர் அண்ணாவாயிற்றார். திருமங்கை வேறு எந்தப் பெருமாளையும் அண்ணா என்றழைத்தாரில்லை. முதலில் திருமலைவேங்கடவனை அண்ணா என்று விட்டு அதற்குப் பிறகு இப்பெருமாளை அண்ணா என்றதால் அவருக்கு இவர் அண்ணனானார். அதாவது வேங்கடவனை அண்ணா என்றழைத்த இவர் அதற்குப் பிறகு தமது மங்களாசாசனம் முற்றிலும் வேறு எவரையும் அண்ணா |