பக்கம் எண் :

233

என்றழைக்கவில்லை. திருவேங்கடத்திற்குப் பிறகு இவரை மட்டுமே அண்ணா
என்றதால் அந்த அண்ணாவுக்கு இவர் அண்ணனானார்.

     அண்ணன் குடி கொண்ட கோவில் அண்ணன் கோவிலல்லவா.
அதனால் தான் திருவெள்ளக்குளத்திற்கு அண்ணன் கோவில் என்றும்
பெயருண்டாயிற்று. அண்ணன் கோவில் என்னும் சொல்லே இங்கு பிரதானமாக
விளங்கி வருகிறது.

     அவர்மேல் மங்கையுறை மார்பா என்று நம்மாழ்வார் வேங்கடவனை
விழிக்கிறார். திருமங்கையாழ்வார் இப்பெருமானை பூவார் திருமகள் புல்கிய
மார்பா என்றழைக்கிறார். அதாவது வேங்கடத்து ஸ்ரீனிவாசனுக்கும்
பிராட்டிக்கும் உள்ள தொடர்பை வெள்ளக்குளத்து அண்ணாவுக்கு
வழங்குகிறார். அம்மட்டுமன்றி இப்பெருமாளைத் திருமங்கையாழ்வார் வேடார்
திருவேங்கடமேய விளக்கே என்று விளித்து வேங்கடவனுக்கும் இவருக்கும்
உள்ள தொடர்பை விரிவுபடுத்துகிறார்.

     மேலும் வேங்கடவனை மங்களாசாசனம் செய்து முடிக்கும்போது
“கலியன் சொன்ன மாலை வல்லாரவர் வானவராகுவார் தாமே” என்று
சொல்லி முடித்தார். இவ்வூரிலிருக்கும் அண்ணாவைச் சொல்லும்போது
“கலியன் சொன்ன மாலை வல்லரென வல்லவர் வானவர் தாமே” என்று கூறி
அவருக்கிவர் அண்ணா என்றே தலைக்கட்டி விடுகிறார்.

மூலவர்

     அண்ணன் பெருமாள். கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.

தாயார்

     அலர் மேல் மங்கை

உற்சவர்

     ஸ்ரீனிவாசப் பெருமாள்

உற்சவர்

     பத்மாவதித் தாயார் பூவார் திருமகள்

விமானம்

     தத்வத் யோதக விமானம்

காட்சி கண்டவர்கள்

     சுவேதன்