5) திருமலையில் ஸ்ரீனிவாசப் பெருமாள் தனித்து நிற்கிறார். அந்தக் குறையைப்போக்கிக் கொள்ள இங்கு அலர் மேல் மங்கைத் தாயாருடன் சேர்ந்து காட்சி தருகிறார். இது ஒரு சிறப்பம்சமாகும். 6) இத்தலத்தில் குமுதவல்லியாரும் கோவில் கொண்டுள்ளார். 7) நம்பி என்றும், எம்பெருமானே என்றும் திருமாலை அழைத்து வந்த திருமங்கையாழ்வார் அண்ணா என்ற அழகு தமிழ்ச்சொல்லால் எந்த ஆழ்வாரும் சொல்லாத ஒரு புரட்சிகரமான சொல்லை இரண்டு ஸ்தலங்களின் ஸ்ரீனிவாசன்களுக்குச் சூட்டி மகிழ்கிறார். 8) இது மக்கட்பேறளிக்கும் ஸ்தலமாகும். திருமண காரியங்களை இங்கு வேண்டிக் கொண்டால் சீக்கிரம் நிறைவேறும். ஆயுள் விருத்தியை அளிக்கக் கூடிய ஸ்தலமாகும். ஒரு பிரார்த்தனை தலம் போல வளர்ந்து கொண்டிருக்கும் இத்தலம் மிக்க அழகான சூழ்நிலையில் அமைந்த எழிலான கிராமத்தில் ஸ்ரீனிவாச அண்ணனைப் பொலிவோடு பெற்றுத் திகழ்கிறது. 9) திருமலையைப் போன்றே இங்கும் பிரம்மோத்ஸ்வம் புரட்டாசி மாதமே நடைபெறுகிறது. 10) இப்பகுதி பலாசவனம் என்றும் அழைக்கப்படுகிறது. |