39. திருப்பார்த்தன் பள்ளி
கவள யானைக் கொம்பொசித்த கண்ணனென்றும் காமருசீர்க் குவளை மேக மன்ன மேனி கொண்ட கோனென் னானையென்றும் தவள மாட நீடு நாங்கைத் தாமரையாள் கேள்வ னென்றும் பவள வாயா ளென் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே - (1318) பெரிய திருமொழி 4-8-1 |
என்று திருமங்கையாழ்வார் தன்னையே தாயாகவும், மகளாகவும்
பாவித்துக் கொண்டு தன் மகள் பார்த்தன் பள்ளி எம்பெருமானைக் கண்டு,
யானையின் கொம்பை முறித்த கண்ணனேயென்றும், குவளை மலர் போன்றும்,
மேகம் போன்ற வண்ணம் கொண்ட எனது மன்னனென்றும், யானை
போன்றவனென்றும், திருநாங்கூருக்கு அருகில் உள்ள பார்த்தன் பள்ளியில்
உறைகின்ற தாமரையாள் கேள்வனென்றும், பாடி மயங்கிக்
கொண்டேயிருக்கிறாள் என்கிறார்.
இத்தலம் மிக அழகான கிராமியச் சூழலில் அமைந்து தோப்பும், காடும்,
வயலும், குளமும் சூழ அமைந்துள்ளது.
சீர்காழியிலிருந்தும் இத்தலத்திற்குச் செல்லலாம். திருவெண்காட்டிலிருந்து
சுமார் 2 மைல் தூரம். திருவெண்காட்டிலிருந்து நடந்தே செல்லலாம்.
வரலாறு
இத்தலம் பற்றி பாத்ம புராணம் பேசுகிறது. அர்ஜூனன் இவ்விடத்திற்கு
வந்தபோது அதிகமான தாக வேட்கை யுண்டாக இங்கே தவம் செய்து
கொண்டிருந்த அகத்தியரிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்க, அகத்தியர்
கமண்டலத்தை நோக்க அதில் இருந்த நீரும் வற்றிப்போனது.
இவ்வாறு தண்ணீர் வற்றிப்போவதற்கு என்னவென்று அகத்தியர்
ஆராய்ந்து ஞான திருஷ்டியில் இது கண்ணனுடைய வேலையென்று தெரிந்து
கொண்டு, அர்ஜூனனை நோக்கி அர்ஜூனா நீ எப்போதும், எந்த உதவி
வேண்டுமானாலும் உன் ஆபத்பாண்டவனான கண்ணனையல்லவா அழைக்க
வேண்டும்