பக்கம் எண் :

237

என்று கூற, அர்ஜூனனும் தன் தவறை உணர்ந்து உடனே கண்ணனை
நினைக்க கண்ணன் அவ்விடத்தே வந்து கத்தி ஒன்றை அர்ஜூனனிடம்
கொடுத்தான்.

     அக்கத்தியால் மண்ணைக் கீண்டிப் பூமியைப் பிளக்க உடனே அங்கு
தூய கங்கை நீர் பெருகியது. தாகந்தீர்த்த விஜயன் கண்ணனால் இவ்விடத்து
சிறிது ஞானோபதேசமும் பெற்றான்

     பார்த்தனுக்காக உண்டான கோவிலானதால் பார்த்தன் பள்ளியாயிற்று.
பார்த்தனாகிய அர்ஜூனனுக்கு இவ்விடத்து ஒரு கோவில் உண்டு.

மூலவர்

     தாமரையாள் கேள்வன். மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம்.

உற்சவர்

     பார்த்த சாரதி

தாயார்

     தாமரை நாயகி

தீர்த்தம்

     கட்க புஷ்கரணி

விமானம்

     நாராயண விமானம்

காட்சி கண்டவர்கள்

     அர்ஜூனன், வருணன், பதினொரு வடிவமெடுத்த சிவன்.

சிறப்புக்கள்

     1) வருணன் இவ்விடத்து திருமாலைக்குறித்து கடுந்தவமியற்றித் தனக்கு
பார்த்தசாரதியாக காட்சியளிக்குமாறு வேண்ட அவ்விதமே நடந்தபடியால்
பார்த்த சாரதி பள்ளியென வழங்கி பிறகு பார்த்தன் பள்ளியாயிற்றென்பர்.

     2) அகத்தியர், கௌதமர், பரத்வாஜர் போன்றவர்கள் இவ்விடத்தே
தவம் செய்தனர்.

     3) கண்ணனிடமிருந்து கத்தியைப் பெற்றுக் கீறி தீர்த்தம்
உண்டாக்கியதால் (கட்க-கத்தி) கட்க புஷ்கரணியாயிற்று.

     4) அர்ஜூனனுக்கும் இவ்விடத்து ஒரு கோவிலிருப்பது ஒரு
தனிச்சிறப்பாகும்.